Home
Mobile

இப்படி ஒரு OPPO போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. 6.78-இன்ச் டிஸ்பிளே, 5910mAh பேட்டரி, Hasselblad கேமரா!

ஒப்போ (OPPO) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் 2 ஸ்மார்ட்போன்கள் வருகிற நவம்பர் 21 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவைகள் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 (Oppo Find X8) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ப்ரோ (Oppo Find X8 Pro) ஸ்மார்ட்போன்களாகும்.

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விரு மாடல்களும் நவம்பர் 21 ஆம் தேதியன்று இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாக உள்ளது. இவ்விரு மாடல்களும் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறும் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகும்.

இப்படி ஒரு OPPO போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்!

இந்திய அறிமுகத்திற்கு பின்னர் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஒப்போ பைண்ட் எக்ஸ்8 மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ப்ரோ ஆகிய இரண்டுமே தற்போது ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கின்றன.

ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இவ்விரு மாடல்களுமே ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டதால், அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது 6.59-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது ஸ்டார் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் மறுகையில் உள்ள ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது பேர்ல் ஒயிட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் கலர்களில் வாங்க கிடைக்கும்.

பேட்டரியை பொறுத்தவரை பேஸிக் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ஸ்மார்ட்போன் ஆனது 5630mAh பேட்டரியுடன் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும், அதே நேரத்தில் ப்ரோ வேரியண்ட் அந்த 5910mAh பேட்டரியுடன் வரும். ஆனாலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப்செட் (MediaTek Dimensity 9400 Chipset) தான் இருக்கும் மற்றும் இரண்டுமே ஹசல்பிளாட் கேமரா யூனிட்களை (Hasselblad camera units) கொண்டிருக்கும்

கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் சோனி LTY-700 ப்ரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ராவைடு கேமரா + 50எம்பி சோனி LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும்

மறுகையில் உள்ள ப்ரோமாடல் ஆனது 50எம்பி LYT-808 ப்ரைமரி சென்சார் + 50எம்பி சோனி LYT-600 சென்சார் உடனான அல்ட்ராவைடு ஷூட்டர் + 6எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் அதே 32எம்பி செல்பீ கேமராவை பேக் செய்கிறது

ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்திய சந்தையில் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ஸ்மார்ட்போன் ரூ.49,990 க்கும், ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.62,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை விவரங்கள் மற்றும் பிளிப்கார்ட் வழியிலான விற்பனை தேதி, நவம்பர் 21 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்.

ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து இன்னொரு அறிமுகத்தையும் செய்ய உள்ளது. அது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) அப்டேட் ஆகும். ஒருங்கிணைந்த ஏஐ அம்சங்களுடன் வரும் இந்த ஓஎஸ் அப்டேட் நவம்பர் 21 அன்று இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும்.

Best Mobiles in India

English summary
Oppo Find X8 and Find X8 Pro To Launch in India on November 21 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X