மார்கெட் காலி.. SONY கேமரா.. 64MP டெலிபோட்டோ.. 100W சார்ஜிங்.. ULTRA ப்ரீமியம்.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஓட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் மரண வெயிட்டிங் மோடில் போடும்படியான ஹசல்பிளாட் கேமரா, சாட்டிலைட் கனெக்டிவிட்டி, பெரிஸ்கோப் டெலிபோட்டோ, 16 ஜிபி ரேம், 100W சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 சீரிஸ் வெளியாக இருக்கிறது.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7, எக்ஸ்7 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X7, X7 Ultra Specifications): இந்த சீரிஸ் போன்களில் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) கொண்ட ப்ரீமியம் கிளாஸ் (Glass) மற்றும் லெதர் பேக் வெர்ஷன்கள் (Leather Back Versions) வர இருக்கின்றன.

அதோடு சீ அண்ட் ஸ்கை (Sea/Sky), ஸ்மோக் அண்ட் கிளவுட் பர்பிள் (Smoke/Cloud Purple), டெசர்ட் சில்வர் மூன் (Desert Silver Moon) மற்றும் பைன் ஷேடோ அண்ட் இங்க் ரிதம் (Pine Shadow/Ink Rhythm) ஆகிய 4 கலர்கள் வருகின்றன. இதுவரை வெளியான ஓப்போ மாடல்களைவிட அல்ட்ரா ப்ரீமியம் லுக் கொடுக்கின்றன.
இந்த ஹசல்பிளாட்டில் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (Periscope Telephoto Camera) இடம் பெற்றுள்ளது. ஆகவே, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 போனில் சோனி எல்ஓய்டி-808 (Sony LYT 808) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு ஓவி64பி3எக்ஸ் (OV64B3X) சென்சாருடன் 64 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.
அதேபோல சாம்சங் ஜேஎன்1 (SAMSUNG JN1) சென்சார் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே, ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ராவில் 50 எம்பி (சோனி எல்ஓய்டி-808) மெயின் கேமரா வருகிறது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்8903எக்ஸ் சென்சார் கொண்ட 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது.

அதோடு 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 2 போன்களிலும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இருப்பினும், அல்ட்ரா மாடலில் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த போன்களில் 6.82 இன்ச் 3D கர்வ்ட் டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இதுவொரு எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளேவாகும். இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 எஸ்ஓசி (MediaTek Dimensity 9300 SoC) சிப்செட் வருகிறது.
அதேபோல ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ராவில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Octa Core Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் வருகிறது. இந்த 2 போன்களிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கப்படுகிறது. அதேபோல கலர்ஓஎஸ் சப்போர்ட் கொடுக்கப்படலாம்.

இந்த போன்களில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் வர இருக்கின்றன. அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் வர இருக்கிறது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா போனில் சாட்டிலைட் கம்யூனிகேஷன் (Satellite Communication) சப்போர்ட் வருகிறது.
இந்த போன்களின் ஆரம்பர விலை ரூ.47,157 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம். இந்த அம்சங்கள் மார்கெட் வட்டாரங்களில் கசிந்த தகவல்களாகும். இந்த சூழலில் ஓப்போ நிறுவனம், வரும் ஜனவரி 8ஆம் தேதி ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 போன்கள் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. அதோடு டீசரையும் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








