நான்தான் கிங்கு.. 2 பெரிஸ்கோப்.. SONY சென்சார்.. 100W சார்ஜிங்.. QHD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?
மொத்த மார்கெட்டும் அதிரும்படி முதல்முறையாக 2 பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்ட போன் என்ற பெயர் மட்டுமல்லாமல், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், கியூஎச்டி பிளஸ் டிஸ்பிளே, சோனி சென்சார் மெயின் கேமரா போன்ற மற்ற அம்சங்களிலும் ஒரு போன் பின்னி எடுத்துள்ளது.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X7 Ultra Specifications): இந்த ஓப்போவில் சோனி எல்ஓய்டி 900 (Sony LYT 900) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. சோனி எல்ஓடி 600 (Sony LYT-600) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

சோனி ஐஎம்எக்ஸ்90 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி 3X பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (Periscope Telephoto Camera ) வருகிறது. அதுமட்டுமல்லாமல், சோனி ஐஎம்எக்ஸ்858 (Sony IMX858) சென்சாருடன் 50 எம்பி 6X பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது. இதுவொரு ஹாசல்பிளாட் (Hasselblad) மாடலாகும்.
32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்709 ஆர்ஜிபிடபுள்யூ (Sony IMX709 RGBW) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் வெளியான போன்களில் 2 பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்ட ஒரே போனாக ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா மாடல் மட்டுமே இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட் போன்ற மற்ற அம்சங்களிலும் மார்கெட்டையே மிரள விடுகிறது. இந்த அம்சங்களை இப்போது தெரிந்து கொள்வோம். இந்த போனில் 6.82 இன்ச் (3168 × 1440 பிக்சல்கள்) குவாட்எச்டிபிளஸ் (Quad HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும்.
இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 2160Hz PWM டிம்மிங் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் கலர்ஓஎஸ் 14 கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது.
அதோடு அட்ரினோ 750 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust/Water Resistant) கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. அதோடு டைப்-சி ஆடியோ (Type-C Audio) போர்ட் வருகிறது.
இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
அதோடு 50W கியூஐ (Qi) வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த ஓப்போ போனில் ஓசன் ஸ்கை (Ocean/Sky), டெசர்ட் சில்வர் மூன் (Desert Silver Moon), பைன் ஷேடோ ப்ளூ (Pine Shadow Blue) ஆகிய கலர்கள் வருகின்றன. இதன் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.71,200ஆக இருக்கிறது.
அதேபோல 16 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.77,130ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.83,065ஆகவும் இருக்கிறது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துவிட்டது. அடுத்த ஒருசில மாதங்களில் அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








