வந்தா வாரி தூக்குவீங்க.. 1டிபி மெமரி.. Dimensity 9300 சிப்செட்.. முரட்டுத்தனமான ஒப்போ போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் அடுத்து ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7 யுெவுரவுர பெஞ்ச்மார்க் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7 ஸ்மார்ட்போன் ஆனது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பெஞ்ச்மார்க் தளத்தில் இந்த ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7 (OPPO Find X7) ஸ்மார்ட்போனின் மதிப்பெண்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதன்படி இந்த போனின் சிபியு சோதனையில் 5,21,690 புள்ளிகளையும், ஜிபியு சோதனையில் 911,683 புள்ளிகளையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 2,270,677 புள்ளிகளை பெற்றுள்ளது ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7 போன்.

குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட்(MediaTek's Dimensity 9300 SoC) வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7 போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி மெமரி வசதியுடன் ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. பின்பு கலர்ஒஸ் 14 யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7 போன் அறிமுகமாகும்.

தற்போது ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7 ஸ்மாார்ட்போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்7 ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் வெளிவரும். மேலும் ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ2 (OPPO A2) ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் சிப்செட் வசதியுடன் உடன் வெளிவந்துள்ளது. இந்த போனில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த வெளிவந்துள்ளது. பின்பு 2400×1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 680 நிட்ஸ் ப்ரைட்னஸ்,180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

அதேபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன். பின்பு சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.
33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதேபோல் இந்த ஒப்போ ஏ2 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,340) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








