அசராம OnePlus-ஐ Oppo தூக்கி சாப்டுடும் போலயே.! அழகை மிஞ்சும் புது OPPO Find X6.!

|

ஸ்மார்ட்போன் என்று வந்து விட்டாலே அதன் வடிவமைப்பிற்கும் அதில் உள்ள அம்சங்களுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும், ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு என்று வந்துவிட்டாலே, அது அந்த போனின் ரியர் பேனலில் உள்ள கேமரா பம்ப் இல் தான் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சிறிய இடத்தில் மேற்கொள்ளப்படும் சில வித்தியாசமான மாற்றங்கள் மூலம் தான், ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் தனக்கான ஒரு தனி அடையாளத்தைச் சம்பாதிக்கின்றன. இது தான் வழக்கமாக நடக்கும் உண்மை.! இப்படி சமீபத்தில், தனக்கென்று ஒரு தனி அடையாளத்தைத் தேடிக்கொண்ட ஸ்மார்ட்போன் டிவைஸ் தான் OPPO Find X6.

அசராம OnePlus-ஐ Oppo தூக்கி சாப்டுடும் போலயே.! புது OPPO Find X6 போன்!

கண்ணைக் கவரும் வடிவமைப்பு மற்றும் சுவாரஸ்யமான அம்சங்களை வழங்கும் நோக்கத்துடன், உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான OPPO வரவிருக்கும் அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனா OPPO Find X6 சீரிஸ் இல் சில அட்டகாசமான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. OPPO Find X6 இன் சமீபத்திய லீக் ரெண்டர் புகைப்படங்கள் இதன் புதிய லுக்கை வெளிப்படுத்தியுள்ளது.

5G போன்லயே இந்த போன் தான் கெத்து.! இப்போதே வாங்க கிடைக்கும் Realme 10 Pro+ 5G.!5G போன்லயே இந்த போன் தான் கெத்து.! இப்போதே வாங்க கிடைக்கும் Realme 10 Pro+ 5G.!

மைக்ரோ-பிளாக்கிங் தளமான Twitter இல் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது முந்தைய OPPO Find X5 தொடரிலிருந்து வேறுபட்ட வடிவமைப்பைப் பெற்றுள்ளது. டிப்ஸ்டர் இவான் ப்ளாஸ் வழங்கிய ரெண்டரில், பின்புறத்தில் ஒரு பெரிய கேமரா பம்பில் ஹாசல்பிளாட் பிராண்டிங்கை OPPO Find X6 புகைப்படம் காண்பிக்கிறது.

அசராம OnePlus-ஐ Oppo தூக்கி சாப்டுடும் போலயே.! புது OPPO Find X6 போன்!

வடிவமைப்பைப் பொறுத்தவரை, OPPO Find X6 சாதனம் கிளாஸ் அல்லது செராமிக் கொண்ட வெள்ளை நிற பின்புறத்துடன் கூடிய பிரீமியம் தோற்றமுடைய Oடிசைனை கொண்டுள்ளது. பின்புறம் ஒரு பளபளப்பான பூச்சு கொண்டதாகக் காட்சியளிக்கிறது. இதில் பிரமாண்டமான, செவ்வக கேமரா ஐலேண்ட் உள்ளே, மூன்று கேமராக்களுடன் கூடுதலாக டேப்லெட் வடிவ டூயல் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

கழுகுகளை வைத்து இந்திய எல்லையில் எதிரிகளை வதம் செய்கிறதா இந்திய ராணுவம்.! வேட்டை ஆரம்பம்.!கழுகுகளை வைத்து இந்திய எல்லையில் எதிரிகளை வதம் செய்கிறதா இந்திய ராணுவம்.! வேட்டை ஆரம்பம்.!

இது ஒரு பெரிஸ்கோப் லென்ஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது கேமராவிற்கும், இந்தச் சாதனத்தில் LED ப்ளாஷ் இருக்கும் இடத்திற்கும் இடையே "Powered by MariSilicon" என்று எழுதப்பட்ட வாக்கியங்களை நம்மால் பார்க்க முடிகிறது. கேமரா பம்ப் உடன் இணைக்கப்பட்ட செவ்வகத் தட்டில், "Co-engineered with" என்ற வாக்கியத்துடன் ஹாசல்பிளாட் (Hasselblad) பிராண்டிங் உள்ளது.

அசராம OnePlus-ஐ Oppo தூக்கி சாப்டுடும் போலயே.! புது OPPO Find X6 போன்!

OPPO Find X6 ஆனது பிரைமரி கேமரா இடத்தில் 1-இன்ச் கொண்ட 50MP சென்சார், அதற்கு அடுத்ததாக 50MP அல்ட்ரா-வைட் மாட்யூல் மற்றும் 32MP சென்சார் பெரிஸ்கோப் கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. GSMArena இன் அறிக்கையின்படி, இந்த டிவைஸ் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Avatar 2 விடுங்க மக்களே.! தங்க டிராகன் முட்டையுடன் விற்பனைக்கு வந்த Oppo Reno 8 பாருங்க.! விலை இவ்வளவு தானா?Avatar 2 விடுங்க மக்களே.! தங்க டிராகன் முட்டையுடன் விற்பனைக்கு வந்த Oppo Reno 8 பாருங்க.! விலை இவ்வளவு தானா?

இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனின் ப்ரோ மாடல் 2023 முதல் காலாண்டில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது. தெரியாதவர்களுக்கு, Hasselblad பிராண்டிங் கேமரா அமைப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக OnePlus திகழ்கிறது. இப்போது வரை OnePlus உடன் கிடைத்த சிறந்த கேமரா அமைப்பு இனி Oppo-விலும் கிடைக்கப் போகிறது.

Best Mobiles in India

English summary
OPPO Find X6 Upcoming Flagship Smartphone Spotted With Hasselblad Branding On Huge Rear Camera Bump

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X