Home
Mobile

Oppo Find X5 Pro போனுக்காக பலர் காத்திருக்காங்க: அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?

ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக மற்ற நிறுனங்களை விட தனித்துவமான டிசைன் மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்5 ப்ரோ

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்5 ப்ரோ

அந்த வரிசையில் ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில்
கசிந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்5 ப்ரோ மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்5 ப்ரோ சிப்செட்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்5 ப்ரோ சிப்செட்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும்.
இது மீடியாடெக் சிப்செட் வசதியை விட சிறந்தது. மேலும் ஸ்னாப்டிராகன் சிப்செட்-இன் செயல்திறன் மிக அருமையாக இருக்கும் என்றே
கூறலாம்.

டிஸ்பிளே மற்றும் கேமரா

டிஸ்பிளே மற்றும் கேமரா

இணையத்தில் கசிந்த தகவலின்படி, இந்த புதிய ஒப்போ போன் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். மேலும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 8ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 4500 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்தஒப்போ ஃபைண்ட் எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே இந்நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ97 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ97 5ஜி

ஒப்போ ஏ97 5ஜி

இந்த ஒப்போ ஏ97 5ஜி ஸ்மார்ட்போன் 6.56-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது . மேலும் 2408 x 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. அதேபோல் நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஒப்போ ஏ97 5ஜி போன்.

ஒப்போ ஏ97 5ஜி கேமரா

ஒப்போ ஏ97 5ஜி கேமரா

ஒப்போ ஏ97 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 8எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.

அருமையான சிப்செட்

அருமையான சிப்செட்

இந்த ஒப்போ ஏ97 5ஜி போன் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பின்பு ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ மொபைல்.

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

ஒப்போ 97 5ஜி போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பான அம்சங்களைகொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன். அதேபோல் டூயல் சிம், 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிஎன்எஸ்எஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த ஒப்போ 97 5ஜி ஸ்மார்ட்போன்.

 ஒப்போ ஏ97 5ஜி  விலை

ஒப்போ ஏ97 5ஜி விலை

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ97 5ஜி ஸ்மார்ட்போனின் விலை Yuan 2,099 (இந்திய மதிப்பில் ரூ.24,730) ஆக உள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஒப்போ ரெனோ 8 ப்ரோ

ஒப்போ ரெனோ 8 ப்ரோ

அதேபோல் ஒப்போ நிறுனம் வரும் 2022 ஜூலை 18-ம் தேதி ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் Dimensity 8100-MAX சிப்செட் வசதி, Ultra-Conductive கூலிங் சிஸ்டம் போன்ற புதுமையான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

AMOLED டிஸ்பிளே

குறிப்பாக 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு இந்த புதிய போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 32எம்பி செல்பீ கேமரா போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X5 Pro smartphone to launch in August 2022: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X