Home
Mobile

12ஜிபி ரேம், 50எம்பி கேமரா என உயர்ரக அம்சம்: வருகிறது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4-எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்புக் கொண்டிருக்கும் என வதந்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு சென்சார்கள் குறித்த தகவல்கள் வெளியாகின, அதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கொண்டிருக்கும் எனவும் இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 அம்சத்தை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4 ஸ்மார்ட்போனானது விரைவில் அறிமுகமாகும் என்பது உண்மையான தகவலே ஆகும். சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்த சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நிறுவனம் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் குறித்த விவரங்களை வழங்கும் சமீபத்திய வதந்திகள் வெளியாகியுள்ளன.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்3-க்கு அடுத்தப்படியான சாதனம்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்3-க்கு அடுத்தப்படியான சாதனம்

கடந்த மாதம் அறிக்கையின்படி, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4 ஸ்மார்ட்போனானது இந்தியாவை தவிர்த்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்3-க்கு அடுத்தப்படியாக அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவந்தது. இருப்பினும் இந்த அறிக்கையில் கூடுதல் தகவல் எதையும் வெளியிடவில்லை. சமீபத்திய கசிவுகள் படி கேமரா குறிப்புகள் குறித்த ஏணைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

6.78 இன்ச் க்யூ எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.78 இன்ச் க்யூ எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4 வெளியான தகவல்கள் குறித்து பார்க்கையில், ஒப்போவின் வரவிருக்கும் ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் க்யூ எச்டி ப்ளஸ் 1,440×3,216 பிக்சல்கள் எல்டிபிஓ இ4 அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டிஸ்ப்ளேவை இது கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மீடியாடெக்-ன் சமீபத்திய மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்பெட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது.

மூன்று பின்புற கேமரா

மூன்று பின்புற கேமரா

Oppo Find X4 ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என வதந்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரண்டு கேமராக்கள் கொண்டிருக்கும் எனவும் 50 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியோடு கொண்டிருக்கும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

125 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்ட் சார்ஜிங்

125 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்ட் சார்ஜிங்

கடந்த ஆண்டு ஒப்போவில் அறிவிக்கப்பட்ட 125 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் இந்த சாதனம் வரக்கூடும் என முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட்போனானது 80 வாட்ஸ் வேகமான வயர்ட் சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி

Oppo Find X4 ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு வேரியண்ட் வகைகளில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேரியண்ட்கள் குறித்து பார்க்கையில், இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசியோடு வரும் எனவும் மற்றொன்று 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் இதன் விலை ரூ.53500 என இருக்கும். 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆனது ரூ.65400 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Oppo Find X4 Might Launching with 50MP Camera, 12GB Ram, 5000 mAh Battery and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X