Home
Mobile

Oppo Find X3 5ஜி சீரிஸ் போன்கள் மார்ச் 11ல் அறிமுகமா? மொத்தம் இத்தனை மாடல்களா?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ நிறுவனம் வரும் மார்ச் 11 ஆம் தேதி சீனாவில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 (Oppo Find X3) தொடரை அறிமுகப்படுத்தப்போவதாக உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, ஃபைண்ட் எக்ஸ் 3 சீரிஸிலும் நான்கு ஸ்மார்ட்போன்கள் இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 நியோ மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 லைட் ஆகிய மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

கடந்த ஆண்டைப் போலவே, ஃபைண்ட் எக்ஸ் 3 சீரிஸிலும் நான்கு ஸ்மார்ட்போன்கள் இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 நியோ மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 லைட் ஆகிய மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 ஹர்டுவேர் போன்ற ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3

ஒன்பிளஸ் 9 ஹர்டுவேர் போன்ற ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 சீரிஸில் ஒன்பிளஸ் 9 சாதனங்களைப் போன்ற ஹார்ட்வேர் இருக்கும் என்றும், இவை இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ நிறுவனம் 'ஃபுல்-பாத் கலர் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' என்ற புதிய தொழில்நுட்பத்தை ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோவுடன் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 லைட்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 லைட்

புதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 மற்றும் ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஆகிய போன்கள் ஸ்னாப்டிராகன் 888 5 ஜி சிப்செட் உடனும் அதேசமயம், ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 லைட்டில் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட்டும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஃபைண்ட் எக்ஸ் 3 லைட் முன்பு ஒப்போ ரெனோ 5 5 ஜியின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 11 ஆம் தேதிக்கு நேரடி லைவ்

மார்ச் 11 ஆம் தேதிக்கு நேரடி லைவ்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 தொடர் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக Weibo இல் உறுதிசெய்யப்பட்டது. தவிர, ஒப்போவின் யூடியூப் சேனலும் மார்ச் 11 ஆம் தேதிக்கு ஒரு நேரடி லைவ் ஸ்ட்ரீமைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு தனித்துவமான வண்ண விருப்பத்தில் வரும் என்பதை அதன் ஹாஸ்டேக் குறிக்கிறது. மார்ச் 11 நிகழ்வில், ஒப்போ இரண்டு மாடல்களை மட்டுமே வெளியிடக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 நியோ

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 நியோ

ஃபைண்ட் எக்ஸ் 3 மற்றும் ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோவுக்கு பின்னர் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 நியோ மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 லைட் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும். குறிப்பிட்டுள்ளபடி, ஃபைண்ட் எக்ஸ் 3 லைட் ஒப்போ ரெனோ 5 5 ஜியின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் , அதேசமயம் ஃபைண்ட் எக்ஸ் 3 நியோ மறுவடிவமாக்கப்பட்ட ரெனோ 5 ப்ரோ + ஆக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Find X3 Series to Debut on March 11 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X