Home
Mobile

அறிமுகத்துக்கு முன் Oppo Find X3 Pro சிறப்பம்சங்கள் லீக்: என்னென்ன தெரியுமா?

ஒப்போ ஃபைண்ட் எஸ்க் 3 ப்ரோ சாதனத்தில் இன்னும் அறிவிக்கப்படாத 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 766 முதன்மை சென்சாருடன் கூடிய அதிவேக கேமரா சென்சார் பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒப்போ நிறுவனம் மார்ச் மாதத்திற்குள் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 சீரிஸை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொடரில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 மற்றும் ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்3 ப்ரோ முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

அறிமுகத்துக்கு முன் Oppo Find X3 Pro சிறப்பம்சங்கள் லீக்: என்னென்ன தெர

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 தொடர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 செயலி மூலம் இயக்கப்படும் என முன்பு உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் டிப்ஸ்டர் மூலமாக பின்புற குவாட் கேமரா அமைப்புகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ சாதனம் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 766 முதன்மை சென்சாருடன் அதிவேக கேமரா சென்சார் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன் விவரங்கள் தற்போதுவரை வெளியாகவில்லை.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ சாதனத்தில் நான்கு கேமராக்கள் இருக்கிறது. இதில் 13 மெகாபிக்சல் கேமரா உட்பட டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் ஜோடியாக 2 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியுடன் வரும் என கூறப்படுகிறது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ 1440x3216 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி. க்யூஎச்டி ப்ளஸ் தீர்மானம் உடன் 6.7 அங்குல வளைந்த டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 கலர்ஓஎஸ் ஆகியவை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வரும் எனவும் கூறப்படுகிறது. வெளியீட்டு தேதியை ஒப்போ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 நியோ, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 லைட், ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஆகியவை இந்த தொடரில் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo Find X3 Pro Smartphone Specification Leaked Before Launch: Here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X