Home
Mobile

32எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான ஒப்போ ஃபைண்ட் எஸ்க்3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.இந்நிலையில் புதிய ஒப்போ ஃபைண்ட் எஸ்க் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எஸ்க்3 ப்ரோ

ஒப்போ ஃபைண்ட் எஸ்க்3 ப்ரோ

நான்கு ரியர் கேமராக்கள், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான மென்பொருள் வசதி என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் எஸ்க்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனம் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒப்போ ஃபைண்ட் எஸ்க்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

6.7-இன்ச் LTPO AMOLED குவாட் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.7-இன்ச் LTPO AMOLED குவாட் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஒப்போ ஃபைண்ட் எஸ்க்3 ப்ரோ தனித்துவமான டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. அதாவது 6.7-இன்ச் LTPO AMOLED குவாட் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 3216 x 1440 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 ஸ்னாப்டிராகன் 888 5என்எம் பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 888 5என்எம் பிராசஸர்

ஒப்போ ஃபைண்ட் எஸ்க்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 888 5என்எம் பிராசஸர் உடன் அட்ரினோ 660 ஜிபியு ஆதரவு உளளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 (ColorOS 11.2) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை வசதியை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

ஒப்போ ஃபைண்ட் எஸ்க்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX766 பிரைமரி கேமரா + 13எம்பி tertiary சென்சார் + 3எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் OIS, EIS போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது இதன் பின்புற கேமராக்கள். குறிப்பாக 32எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் புகைப்படங்களை மிகவும் தெளிவாக எடுக்க முடியும்.

ஒப்போ ஃபைண்ட் எஸ்க்3 ப்ரோ

ஒப்போ ஃபைண்ட் எஸ்க்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 65 வாட் SuperVOOC 2.0 பிளாஸ் சார்ஜ் மற்றும் 30W VOOC Air வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

யூ.எஸ்.பி 3.1 மற்றும் ஸ்னாப்டிராகன் எக்ஸ் 60 மோட

புளூடூத் 5.2, வைஃபை 6 இ, யூ.எஸ்.பி 3.1 மற்றும் ஸ்னாப்டிராகன் எக்ஸ் 60 மோடம், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போஃபைண்ட் எஸ்க்3 ப்ரோஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.1,00,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Find X3 Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X