ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 கீக்பெஞ்ச் ஸ்கோரிங் இவ்வளவா? முக்கிய சிறப்பம்சமே இது தான்..

|

மிரட்டலான அம்சங்களுடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று சமீபத்திய டிப்ஸ்டர் தகவல் தெரிவித்துள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் அண்ட்ராய்டு 11 இல் இயங்கும் புதிய கலர்ஓஎஸ் பதிப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல்

அதேபோல், இந்த ஸ்மார்ட்போனுடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 நியோ, மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 லைட் ஆகிய மாடல்களும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 உடன் வெளிவரும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த புதிய மாடல்கள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ் தொடரின் சமீபத்திய மாடல்களாக அறிமுகப்படுத்தப்படலாம்.

சமீபத்தில்

சமீபத்தில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 போனின் மாடல் எண்ணை PEDM00 கொண்டு AIDA64 மற்றும் AnTuTu பயன்பாடுகள் கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டது. AIDA64 பட்டியல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் ஸ்மார்ட்போன் "கோனா" என்ற குறியீட்டு பெயரில் ஒரு சிப்செட் இருப்பதையும் காட்டுகிறது. கோனா என்ற பெயர் கடந்த காலங்களில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் தொடர்புடையது.

யாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்! இப்போதே ட்ரை செய்யுங்கள்!யாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்! இப்போதே ட்ரை செய்யுங்கள்!

இருப்பினும்

இருப்பினும், ட்விட்டர் பயனரால் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட் மூலம் காட்டப்பட்டுள்ளபடி, AnTuTu பட்டியல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ஐ தெளிவாகக் காட்டுகிறது. அந்த பட்டியல் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 உடன் கலர்ஓஎஸ் 11.2 ஐ பரிந்துரைக்கபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1,080x2,412 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளேயுடன் 8ஜிபி ரேம் உடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த

இந்த புதிய ஸ்மார்ட்போன் 12.6 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சாரை கொண்டிருக்கிறது. கீக்பெஞ்ச் பட்டியலும் இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் மதிப்பெண்னாக 4,280 மற்றும் மல்டி கோர் ஸ்கோராக 12,843 ஆகியவற்றைப் பெற்றது என்பதைக் காட்டுகிறது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 போனின் விலை மற்றும் இன்னும் பல சுவாரசிய தகவல்களை வரும் வாரங்களில் நாம் எதிர்பார்க்கலாம் என்று டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Find X3 pops-up on Geekbench with Snapdragon 870 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X