ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் இந்தியாவில் அறிமுகம்!

|

ஒப்போ ஸ்மார்ட்போன் பிராண்ட் நிறுவனம் தற்பொழுது புதிதாக ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் என்ற ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. உலகப் புகழ் பெற்ற லம்போர்கினி கார் நிறுவனத்தின் பிரத்தியேக எடிஷனாக தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மிரட்டலான போனில் உள்ள சிறப்புகளைப் பார்க்கலாம்.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயங்கும். இந்த புதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போன் கலர் ஓஎஸ் 7.1 இல் இயங்குகிறது. இது 5 ஜி இணைப்புடன் வருகிறது மற்றும் 120Hz QHD + 10bit OLED டிஸ்பிளே திரையைக் கொண்டுள்ளது.

சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரின் சிசர்ஸ் டோர்

சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரின் சிசர்ஸ் டோர்

ஒப்போ நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த புதிய எடிஷன் ஸ்மார்ட்போன் ஒரு சிறப்புப் பெட்டியில் ஒட்டுமொத்த இதர சாதனங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போனின் பெட்டிகூட சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரின் சிசர்ஸ் டோர் போல திறக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் லம்போர்கினியின் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது.

1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! ஜியோவிற்கு போட்டியாக களமிறங்கிய இளைஞர்களின் நிறுவனம்!1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! ஜியோவிற்கு போட்டியாக களமிறங்கிய இளைஞர்களின் நிறுவனம்!

லம்போர்கினியின் லோகோ மற்றும் ஒய் வடிவ ஹெட்லைட் டிசைன்

லம்போர்கினியின் லோகோ மற்றும் ஒய் வடிவ ஹெட்லைட் டிசைன்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போனுடன் வரும் அனைத்து தயாரிப்பிலும் லம்போர்கினியின் லோகோ மற்றும் ஒய் வடிவ ஹெட்லைட் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் வரும் சார்ஜர், யூ.எஸ்.பி கேபிள், இன்-வெஹிகிள் ஃபிளாஷ் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் இயர்போன்கள், மொபைல் கேஸ் அனைத்தும் லம்போர்கினி தோற்றத்தில் வருகிறது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் சிறப்பு

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் சிறப்பு

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போனில் 6.7' இன்ச் கியூஎச்டி பிளஸ் அல்ட்ரா விஷன் டிஸ்ப்ளே உள்ளது, இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை உள் சேமிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள்! பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள்! பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!

கேமரா விபரம்

கேமரா விபரம்

கேமராவைப் பொறுத்தவரை, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷனில் 48 எம்.பி முதன்மை சென்சார் கேமரா, 12 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 13 எம்.பி டெலிஃபோட்டோ கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு என்று இந்த போனில் 32 எம்.பி கொண்ட முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 65W SuperVOOC 2.0 பாஸ்ட் சார்ஜிங் உடன் கூடிய 4200 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Find X2 Pro Automobili Lamborghini Edition Announced In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X