Home
Mobile

ஒப்போ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்10 (Oppo Find X10) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த ஒப்போ போன் வெளியாகி உள்ளது. இப்போது ஒப்போ பைண்ட் எக்ஸ்10 விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்10 அம்சங்கள் (OPPO Find X10 Specifications): 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 2000 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஒப்போ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9600M 3என்எம் பிராசஸர் (Octa-Core Dimensity 9600M 3nm processor) உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 மாடல் வெளியாகி உள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் ARM G1-Ultra GPU கிராபிக்ஸ் ஆதரவும் இதில் உள்ளது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 வெளியாகி உள்ளது. அதேபோல் கலர்ஓஎஸ் 17 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 மூலம் இந்த புதிய ஒப்போ போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

OIS ஆதரவு கொண்ட 200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி 2.8x டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்10 மாடல். அதேபோல் ஹேசல்பிளாட் போர்ட்ரெய்ட், 4கே வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ரியர் கேமராக்களில் உள்ளன.

மேலும் செல்பிகளுக்கு, வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த ஒப்போ போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகளும் இந்த ஒப்போ போனில் உள்ளன.

IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 மாடல் வெளியாகி உள்ளது.யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 மாடல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஒப்போ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

5ஜி, புளூடூத் 6.2, ஜிபிஎஸ்,கலிலியோ (Galileo), க்ளோனஸ் (GLONASS), வைஃபை 7, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 216 கிராம் ஆகும். ஐஸ் ப்ளூ, லைட் ஆரஞ்சு மற்றும் லைட் டைட்டானியம் ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்10 விலை

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்10 மாடலின் விலை 5499 yuan (இந்திய மதிப்பில் ரூ.78,510)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்10 மாடலின் விலை 5999 yuan (இந்திய மதிப்பில் ரூ.85650)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்10 மாடலின் விலை 6499 yuan (இந்திய மதிப்பில் ரூ.92790)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்10 மாடலின் விலை 7499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,07,070)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO Find X10 with Dual 200MP cameras launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X