வாங்குனா இப்படிவொன்ன வாங்கனும்.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் பிரீமியம் மாடலாக ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 (OPPO Find X10) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 200 எம்பி கேமரா, 8000mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் பட்டையை கிளப்புகிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் டிஸ்பிளே மற்றும் கேமரா பிரியர்களுக்கு ஏற்ப மட்டுமல்லாமல், அதிக பேட்டரி கேபாசிட்டி கேட்கும் கஸ்டமர்களுக்கும் ஏற்ற மாடலாக இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 இருக்கிறது. ஏனென்றால், ஹாசல்பிளாட் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், 8000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. முழு பீச்சர்கள் மிரளவிடும்படி உள்ளன.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 அம்சங்கள் (OPPO Find X10 Specifications): 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமல்லாமல், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொடுத்து இருக்கிறது.
ஆக்டா கோர் டைமன்சிட்டி 9600எம் 3என்எம் (Octa Core Dimensity 9600M 3nm) சிப்செட்டை இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆர்ம் ஜி1 அல்ட்ரா ஜிபியு (ARM G1 Ultra GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் லேட்டஸ்ட் கலர்ஓஎஸ் 17 (ColorOS 17) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
200 எம்பி மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை கொடுத்து இருக்கிறது. இந்த டெலிபோட்டோவுக்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. ஹசல்பிளாட் போர்ட்ராய்டு (Hasselblad Portrait) கிடைக்கிறது.
50 எம்பி கேமராவை இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) கொடுக்கிறது. இது ஸ்லிம் மாடலாக இருக்காது. ஏனென்றால், 8.35 எம்எம் தடிமன் மற்றும் 216 கிராம் எடை வருகிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,39,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,69,999ஆக இருக்கிறது. ஓப்போ ஹசல்பிளாட் டெலிகன்வர்டர் கிட் (OPPO Hasselblad Teleconverter Kit) இதற்கு பொருத்தலாம். இதன் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. கிளாசியர் ப்ளூ (Glacier Blue) கலர் உள்ளது.
மேலும், குளோவ் கோரல் (Glow Coral) மற்றும் மிஸ்ட் கிரே (Mist Grey) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 15 சதவீத உடனடி கேஷ் பேக், 30 மாதங்களுக்கு ஜீரோ டவுன் பேமெண்ட், ரூ.8,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட அறிமுக சலுகைகளுடன் கிடைக்க இருக்கிறது. அமேசான், பிளிப்காரட்டில் ப்ரீ-ஆர்டர் செய்யலாம். அக்டோபர் 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
