வேற எந்த OPPO போனும் வாங்கிடாதீங்க.. வயர்லெஸ் சார்ஜிங், இரண்டு 200MP கேமராவுடன் புதிய போன்.. என்ன மாடல்?
ஒப்போ நிறுவனம் கடந்த ஆண்டு சீனாவில், அதன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோவுடன் சேர்த்து ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சமீபத்தில் இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் ஆகின
இவைகள் றிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, இவ்விரு மாடல்களின் அப்கிரேடெட் வெர்ஷன்கள் ஆன, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மாடல்களின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. சுவாரசியமாக இந்த சீரீஸில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் எனப்படும் மூன்றாவது மாடலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போ வழியாக, டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சு பகிர்ந்து உள்ள சமீபத்திய விவரங்களின்படி ஒப்போ பைண்ட் எக்ஸ்10 சீரீஸில் வயர்லெஸ் சார்ஜிங் பாகங்கள் மற்றும் மொபைல் ஸ்டாண்டு ஆகியவைகளுக்கான ஆதரவை பெறக்கூடும். இது மிகவும் சுவாரசியமான நகர்வாகும்.
ஆப்பிள் நிறுவனம் - கடந்த செப்டம்பர் 2020 இல் உள்ளமைக்கப்பட்ட மேக்சேப் (MagSafe) மேக்னடகளுடன் ஐபோன் 12 சீரீஸை அறிமுகப்படுத்தி இருந்தது. பின்னர், கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 10 சீரிஸில் பிக்சல்ஸ்னாப் (Pixelsnap) என அழைக்கப்படும் இதேபோன்ற செயல்பாட்டை கொண்டு வந்தது. இப்போது இதை அப்படியே ஒப்போ நிறுவனமும் செய்யவுள்ளது போல் தெரிகிறது
ஒப்போ பைண்ட் எக்ஸ்10 சீரீஸில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த சீரீஸின் கீழ் வரும் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ்ஆகிய இரண்டுமே '
இன்னும் வெளியிடப்படாத MediaTek Dimensity 9600 சிப்செட்களால் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது 2nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மறுகையில் உள்ள ஸ்டாண்டர்ட் பைண்ட் எக்ஸ்10 மாடலில் 3nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட MediaTek Dimensity 9500+ சிப் பொருத்தப்படலாம். இது கடந்த ஆண்டு MediaTek Dimensity 9500 சிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் உடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும்.
கேமராக்களை பொறுத்தவரை பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மாடலின் பின்புறத்தில் இரண்டு 200-மெகாபிக்சல் கேமராக்கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இது 1/1.3-இன்ச் சென்சார் கொண்ட 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை பேக் செய்ய வாய்ப்புள்ளது. ஒப்போ பைண்ட் எக்ஸ்10 சீரீஸ் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படலாம்.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- TUV ரெயின்லேண்ட் இன்டெலிஜெண்ட் ஐ கேர் 5.0 சர்டிபிகேட்
- 3nm மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்
- 16GB வரை LPDDR5x ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- எக்ஸ்-ஆக்சிஸ் ஹாப்டிக் மோட்டார்
- 36,344.4 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்
- Hasselblad ஆல் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா
- 1/1.28-இன்ச் சென்சார், 23மிமீ குவிய நீளம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.5) சோனி LYT-828 ப்ரைமரி கேமரா
- 15மிமீ குவிய நீளம் உடனான 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் ISOCELL 5KJN5 அல்ட்ராவைடு கேமரா
- 200-மெகாபிக்சல் (எப்/2.1) டெலிஃபோட்டோ கேமரா (70மிமீ குவிய நீளம் மற்றும் ஓஐஎஸ்)
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் 5KJN5 செல்பீ கேமரா
- 7500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- 80W SuperVOOC வயர்டு மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 ஓஎஸ்
- 5 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- SGS டிராப் ரெசிஸ்டன்ஸ் சர்டிபிகேட்
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே சிப்செட், ஓஎஸ், ஐபி ரேட்டிங், டிராப் ப்ரொடெக்ஷன்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான சிறிய 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 32,052.5 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப் /1.6) சோனி LYT-808 வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப்/2.6) சோனி LYT-600 டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமரா
- ப்ரோ மாடலைப் போலவே வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங், ஆனால் சிறிய 7,025mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி


Click it and Unblock the Notifications








