Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 200MP + 200MP + 200MP கேமரா.. லூமோ ட்ரூ இமேஜ் என்ஜினுடன் புது OPPO போன்!

ஒப்போ நிறுவனமானது, அதனுடைய புதிய ஃபிளாக்சிப் மாடலான ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (OPPO Find X10 Pro Max) ஸ்மார்ட்போனின் கேமரா பீச்சர்களை உறுதி செய்துள்ளது. டிரிபிள் 200 எம்பி கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், இந்தியா கேமரா பிரியர்களுக்கு ஏற்ப லூமோட்ரூ இமேஜ் என்ஜினுடன் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்தியாவில் வருகிற அக்டோபர் 22ஆம் தேதியன்று ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரிஸ் (OPPO Find X10 Series) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 (OPPO Find X10) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (OPPO Find X10 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. இதில் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 200MP + 200MP + 200MP கேமரா மாடல்!

ஏனென்றால், அல்ட்ரா பிரீமியம் கேமரா பீச்சர்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனில் 200 எம்பி மெயின் கேமரா, 200 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 200 எம்பி டெலிபோட்டோ கேமரா என்று டிரிபிள் ரியர் கேமராக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஹசல்பிளாட் (Hasselblad) கேமரா செட்டப் கொண்டுள்ளது.

200 எம்பி மெயின் கேமராவில் 1/1.3 இன்ச் சாம்சங் ஐசோசெல் எச்பிசி (Samsung ISOCELL HPC) சென்சார் மட்டுமல்லாமல், எப்/1.5 அபெர்ச்சர் மற்றும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் சாம்சங் ஐசோசெல் எச்பி5 (ISOCELL HP5) சென்சார், எப்/2.2 அபெர்ச்சர் மற்றும் ஆட்டோஃபோகஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

டெலிபோட்டோ கேமராவிலும் சாம்சங் ஐசோசெல் எச்பி5 சென்சார் கிடைக்கிறது. எப்/2.1 அபெர்ச்சர் மற்றும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அவுட்புட்டை மேம்படுத்த லூமோ ட்ரூ இமேஜ் என்ஜின் (LUMO True Image Engine) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு உள்ளது.

போட்டோக்களில் இருக்கும் கலர்கள், லைட்டிங் மற்றும் ஷேடோக்களை துல்லியமாக கையாள இந்த டெக்னாலஜி உதவுகிறது. குறிப்பாக, போட்டோக்களை அதிக ஷார்ப்பாகவோ அல்லது கூடுதல் கலர்களை சேர்த்து காட்டுவதற்கோ பதிலாக, கண்களில் பார்க்கும் காட்சிகளுக்கு நெருக்கமான அவுட்புட்டை கொடுக்க இந்த டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த லூமோ டெக்னாலஜியில் ஹைப்பர் பிக்சல் என்ஜின் (Hyper Pixel Engine), ட்ரூ கலர் எனஜின் (True Color Engine) மற்றும் நேச்சுரல் டோன் என்ஜின் (Natural Tone Engine) என்று மூன்று முக்கிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இவை போட்டோக்களின் ரெசல்யூஷன், கலர் அக்கியூரசி மற்றும் லைட்டிங் - ஷேடோக்களுக்கு இடையிலான சமநிலை ஆகியவற்றை என்ஹான்ஸ் செய்யகின்றன.

ஆகவே, அல்ட்ரா பிரீமியம் கேமரா அனுபவத்தை இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்கும். ஓப்போ ஹாசல்பிளாட் டெலிகன்வர்ட்டர் கிட் இதற்கு கிடைக்க இருக்கிறது. மறுபக்கம், ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ஸ்மார்ட்போனில் டூயல் 200 எம்பி கேமரா கிடைக்க இருக்கிறது. 8000mAh பேட்டரி கொடுக்கப்பட இருக்கிறது.

நெக்ஸ்ட் ஜெனரேஷன் ப்ரோஎக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. இதிலும் லூமோ ட்ரூ கலர் என்ஜின் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட இருக்கின்றன. இந்த மாடல்களின் விலை அல்ட்ரா பிரீமியமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
OPPO Find X10 Pro Max With Triple 200MP Camera To Launch in India on October 22 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X