ஸ்மார்ட்போன் சாம்பிராஜ்யமே மிரளுது.. 200MP + 200MP + 200MP கேமராவுடன் புது OPPO போன்.. எந்த மாடல்?
ஒப்போ (Oppo) நிறுவனம் ஆனது ஸ்மார்ட்போன் சாம்பிராஜ்யத்தைதே மிரட்டும் படியான ஒரு புதிய மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது போல் தெரிகிறது. அது ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (Oppo Find X10 Pro Max) ஸ்மார்ட்போன் ஆகும்.
வரவிருக்கும் பைண்ட் எக்ஸ்10 சீரீஸ் (Find X10 Series), பைண்ட் எக்ஸ்10 (Find X10), பைண்ட் எக்ஸ்10 ப்ரோ (Find X10 Pro) மற்றும் பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (Find X10 Pro Max) ஆகிய மூன்று மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் பைண்ட் எக்ஸ்10 அல்ட்ரா (Find X10 Ultra) அறிமுகமாகும் வரை, இந்த ஆண்டு ஒப்போவின் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் இருக்கும். எனவே, இது உயர்தர கேமரா அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் படியாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது.
ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.89 இன்ச் BOE LTPO OLED டிஸ்பிளே
- 2K ரெசல்யூஷன்
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்
- BT.2020 கலர் கேமட் (color gamut) ஆதரவு
- மிக மெல்லிய பெசல்கள் (bezels)
- மூன்று 200-மெகாபிக்சல் கேமரா செட்டப்
- சுமார் 1/1.3 இன்ச் சென்சார் அளவு கொண்ட 200-மெகாபிக்சல் முதன்மை கேமரா
- சுமார் 1/1.5 இன்ச் சென்சார் அளவு கொண்ட 200-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- சுமார் 1/1.3 இன்ச் சென்சார் அளவு கொண்ட 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 2என்எம் டிமென்சிட்டி 9600 ப்ரோ சிப்செட் (2nm Dimensity 9600 Pro Chipset
- Android 17-ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 17 ஓஎஸ்
- ரியர் கேமரா செட்டப்பில் சிறந்த வண்ணத் துல்லியத்திற்காக 3-மெகாபிக்சல் மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்
- முன்புறத்தில் 50-மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் கேமரா
- பேட்டரி திறன் அல்லது சார்ஜிங் வசதிகள் குறித்த எந்த தகவலும் இல்லை.
ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் எப்போது அறிமுகமாகும்? இது மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய பிற பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் (மற்ற ஒப்போ பைண்ட் எக்ஸ்10சீரீஸ் மாடல்களுடன்) இணைந்து, வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார்
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் விலை: இந்தியாவில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 6.59-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளே
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9000 சீரீஸ் சிப்செட்
- ஹேசல்பிளாட்-டியூன் செய்யப்பட்ட ரியர் கேமரா செட்டப்
- ட்ரிபிள் 50-மெகாபிக்சல் கேமராக்கள்
- 7025mAh பேட்டரி
- ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் - லாவெண்டர் ஸ்கை, மிட்நைட் கிரே மற்றும் சன்செட் ஆரஞ்சு ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications