தம்பி விவோ ஓரம்போ.. மூன்று 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (Oppo Find X10 Pro Max) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான டிசைன், தரமான சிப்செட், அட்டகாசமான கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளியாகி உள்ளது. இப்போது ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (OPPO Find X10 Pro Max Specifications): 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 2000 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9600 ப்ரோ 2என்எம் பிராசஸர் (Octa-Core Dimensity 9600 Pro 2nm processor) உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடல் வெளியாகி உள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் Mali-G2-Ultra-NX GPU கிராபிக்ஸ் ஆதரவும் இதில் உள்ளது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் வெளியாகி உள்ளது. அதேபோல் கலர்ஓஎஸ் 17 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 மூலம் இந்த புதிய ஒப்போ போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
OIS ஆதரவு கொண்ட 200எம்பி பிரைமரி HPC சென்சார் + 200எம்பி HP5 அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி HP5 f/2.1 3x டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடல். அதேபோல் 120X வரை டிஜிட்டல் ஜூம், ஹேசல்பிளாட் போர்ட்ரெய்ட், 4கே வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ரியர் கேமராக்களில் உள்ளன.

செல்பிகளுக்கு, வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த ஒப்போ போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகளும் இந்த ஒப்போ போனில் உள்ளன.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடல் வெளியாகி உள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, புளூடூத் 6.2, ஜிபிஎஸ்,கலிலியோ (Galileo), க்ளோனஸ் (GLONASS), வைஃபை 7, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 235 கிராம் ஆகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எக்ஸ்500 சீரிஸ் போன்களுக்கு போட்டியாக இந்த புதிய ஒப்போ போன் வெளியாகி உள்ளது.

ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் விலை
- 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 6799 yuan (இந்திய மதிப்பில் ரூ.97,075)-ஆக உள்ளது.
- 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 7499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,07,070)-ஆக உள்ளது.
- 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 7999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,14,210)-ஆக உள்ளது.
- 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 8999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,28,490)-ஆக உள்ளது.
ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் போன் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். இந்த ஒப்போ போன் விரைவில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
