Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 200MP கேமரா.. 120X ஜூம்.. 8000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளும்படியான கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (OPPO Find X10 Pro Max) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஓப்போ ஹாசல்பிளாட் டெலிகன்வெர்ட்டர் கிட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு நிகரான அவுட்புட் கொடுக்க ஓப்போ ஹாசல்பிளாட் டெலிகன்வெர்ட்டர் கிட் (OPPO Hasselblad Teleconverter Kit) கொடுக்கப்படுகிறது. ஆனால், இதை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். இந்த ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடலில் 200 எம்பி டெலிபோட்டோ கேமரா வருவதால் இதற்கு ஏற்ப டெலிகன்வெர்ட்டர் என்ஹான்ஸ் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 200MP கேமரா.. 120X ஜூம்.. மாடல்?

மேலும், லூமே இமேஜ் என்ஜின் (LUMO True Image Engine) கிடைக்கிறது. இதுவொர ட்ரூ கலர் கேமரா (True Color Camera) அவுட்புட் கொடுக்கும் டெக்னாலஜியாக இருக்கிறது. ஆகவே, நேச்சுரல் கான்ட்ராஸ்டு, ஸ்கின் கலர் மற்றும் ஆப்டிகல் டெக்ஸ்ச்சர்களை அவுட்புட்டாக பெற்று கொள்ள முடியும். இதுபோக ஹாசல்பிளாட் போர்ட்ராய்டு, ஓஐஎஸ் டெக்னாலஜி உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (OPPO Find X10 Pro Max Specifications): 200 எம்பி மெயின் கேமரா + 200 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 120X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் ஹாசல்பிளாட் போர்ட்ராய்டு கிடைக்கிறது.

4K டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் கிடைக்கிறது. 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் பிரிகொன்சி கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 200MP கேமரா.. 120X ஜூம்.. மாடல்?

இதுபோக எச்டிஆர்10பிளஸ் (HDR 10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 9600 ப்ரோ 2என்எம் (Octa Core Dimensity 9600 Pro 2nm) சிப்செட் கொடுக்கப்படுகிறது. மாலி ஜி2 அல்ட்ரா என்எக்ஸ் ஜிபியு (Mali G2 Ultra NX GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

கலர்ஓஎஸ் 17 (ColorOS 17) கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) கிடைக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொடுத்து இருக்கிறது.

80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 8000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,99,999ஆக இருக்கிறது. டைட்டானியம் கிரே, லூனா ஒயிட் கலர்களில் கிடைக்க இருக்கிறது. அக்டோபர் 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட், அமேசானில் ப்ரீ-ஆர்டர் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
OPPO Find X10 Pro Max With 200MP Triple Camera Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X