வெச்சி செஞ்சிட்டங்க.. OIS கேமரா.. 7025mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 16GB ரேம்.. புது OPPO போன்.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்கள் காட்டில் மழை என்று சொல்ல வேண்டும். ஃபைண்ட் எக்ஸ் சீரிஸ் மாடல்களில் வரிசையாக மூன்று பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 இ (OPPO Find X10 E) ஸ்மார்ட்போனானது, மிட்-பிரீமியம் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த மாடலின் விலை, விற்பனை, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 இ மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. செப்டம்பர் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. ஓரிரு வாரங்களில் குளோபல் மார்கெட்டில் வெளியாவது குறித்த விவரங்கள் தெரியவர இருக்கிறது.

இந்திய மார்கெட்டிலும் ஃபைண்ட் எக்ஸ் சீரிஸ் மாடல்கள் வெளியாகிவருவதால், இந்த மாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், அல்ட்ரா பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரிஸ் மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் கம்மியான பட்ஜெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 இ மட்டுமே கிடைக்க இருக்கிறது.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 இ அம்சங்கள் (OPPO Find X10 E Specifications): 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) உள்ளது.
கலர்ஓஎஸ் 17 (ColorOS 17) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9500s 3nm) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. ஆர்ம் மாலி ஜி1 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali G1 Ultra MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டெலிபோட்டோ கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் ஹசல்பிளாட் போர்ட்ராய்டு (Hasselblad Portrait) கிடைக்கிறது.
சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7025mAh பேட்டரியுடன் இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 இ அறிமுகமாகி இருக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 7.99 எம்எம் தடிமன் மற்றும் 203 கிராம் எடை உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.71,324ஆக இருக்கிறது. இதே விலையில் குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
