Home
Mobile

இந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 25மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

By Prakash S

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ பைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னவென்றால் 25எம்பி செல்பீ கேமரா மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஏஐ போர்டிரெயிட்கள், ஏஐ ஸ்கிரீன் ரெக்ஃனீஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.!

மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஒஎஸ் 5.1 வழங்கப்பட்டுள்ளது, மேலும் 3டி பேஸ் அன்லாக் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதி போன்ற பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இதில் பேஸ் அன்லாக் வசதி முகத்தில் உள்ள 15,000 முக நுனுக்கங்களை ஸ்கேன் செய்து இயங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 3டி லைட்டிங் தொழில்நுட்பம் போர்டிரெயிட்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது என்று தான் கூற வேண்டும்.

 ஒப்போ பைன்ட் எக்ஸ் :

ஒப்போ பைன்ட் எக்ஸ் :

ஒப்போ பைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.42-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்
திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஒப்போ பைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2.5ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்
ஆண்டராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் போர்டாக்ஸ் ரெட் மற்றும் கிளேசியர் புளு போன்ற
நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பிளப்கார்ட் தளத்தில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் ஆனது விற்பனைக்கு வரும்.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய
செல்பீ கேமரா 25மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

ஒப்போ பைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3730எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.59,990-ஆக உள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Find X With Camera Slider, 8GB of RAM Launched in India Price Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X