"இந்த" டெக்னலாஜியை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் இது தான்.!

நிச்சயமாக இது ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

|

இந்திய சந்தையில் தொடர்ச்சியான முறையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய ஒப்போ நிறுவனம், சிறிது காலம் கழித்து இந்த மாதத்திற்கு பின்னர் பைண்ட் எக்ஸ் என்கிற ஒரு முதன்மை ஸ்மார்ட்போனுடன், மீண்டும் இந்திய சந்தைக்குள் நுழைய திட்டமிட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ் வெளியான நாளில் இருந்து கிட்டத்தட்ட (நோக்கியா உட்பட) அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களுமே எக்ஸ் என்கிற குறியீட்டு பெயரின் கீழ் ஸ்மார்ட்போன்களை வெளிக்கிடும் நேரத்தில் ஒப்போவும் அதே பெயர் பாணியினை பின்பற்றியுள்ளது.

முரட்டுத்தனமான ரேம் மற்றும் சிப்செட்.!

முரட்டுத்தனமான ரேம் மற்றும் சிப்செட்.!

கடந்த சில நாட்களாகவே "டீஸ்" செய்யப்பட்டு மற்றும் லீக்ஸ் தகவலில் சிக்கி வந்த இந்த ஸ்மார்ட்போனின் சுவாரஸ்யமான அம்சங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது, அதில் இருந்து நிச்சயமாக இது ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. பிரதான சிறப்பம்சமாக இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன் இணைந்து செயல்படும் டாப்-இன்-தி -லைன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் ஆகியவைகளை கூறலாம்.

எங்கு.? எப்போது வெளியாகிறது.?

எங்கு.? எப்போது வெளியாகிறது.?

வருகிற ஜூன் 19 ஆம் தேதி பாரிசில் நடக்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில், ஒப்போ பைண்ட் எக்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இது இந்திய சந்தைக்கு தான் வரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்தியாவில் கடந்த 2014-க்கு பிறகு, இப்போது தான் நிறுவனத்தின் 'பைண்ட்' தொடரின் கீழ் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா 'பம்ப்' மூலம் மோட்டோவுக்கு பதிலடி.!

கேமரா 'பம்ப்' மூலம் மோட்டோவுக்கு பதிலடி.!

இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை விட இதன் அழகான வடிவமைப்பு தான் அதிகம் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை அறியப்பட்ட அம்சங்களில் எந்த குறையும் இல்லை என்றே கூறலாம். ஒப்போ பைண்ட் எக்ஸ் ஆனது VOOC பாஸ்ட் சார்ஜ் ஆதரவை கொண்டிருக்கும் உடன் 5எக்ஸ் ஜூம் கேமராவைக் கொண்டிருக்கும். 5எக்ஸ் ஜூம் டெக்னாலஜி என்று வரும்போது, இதன் ​​கேமரா தொகுதி 5.7மிமீ தடிமன் இருக்கும், அதாவது ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய கேமரா பம்ப் இருக்கும்.

"இந்த" டெக்னலாஜியை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன்.!

நிறுவனத்தின் இந்த 5 எக்ஸ் ஸூம் தொழில்நுட்பமானது கடந்த ஆண்டு MWC 2017 நிகழ்வில் அறிமுகமானது. இந்த தொழில்நுட்பமானது 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 2எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை வழங்குகிறது, அடு 5எக்ஸ் ஜூமை ஒருங்கிணைக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் ஒப்போ பைண்ட் எக்ஸ் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரிய 6.4 அங்குல சூப்பர் AMOLED டிஸ்பிளே.!

பெரிய 6.4 அங்குல சூப்பர் AMOLED டிஸ்பிளே.!

இதன் VOOC பாஸ்ட் சார்ஜ் டெக்னாலஜியை பற்றி பேசினால், இது வெறும் அது 15 நிமிடங்களில் 2500mAh பேட்டரி யூனிட்டை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. மேலும், Oஒப்போ பைண்ட் எக்ஸ் ஆனது ஒரு 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட, ஒரு மிக பெரிய 6.4 அங்குல சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒரு 3645mAH பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும்.!

ஒரு 3645mAH பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும்.!

டிஸ்பிளேவை தவிர்த்து பைண்ட் எக்ஸ் ஆனது 20 எம்பி + 16 எம்பி என்கிற இரட்டை பின்பக்க கேமராவை கொண்டிருக்கும் என்றும், முன்பக்கத்தை பொறுத்தவரை 25 எம்பி அளவிலான செல்பீ கேமரா இடம்பெறுமென்றும் கூறப்படுகிறது. இது ஒரு 3645mAH பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஸ்னாப்டிராகன் 845 SoC உடன் இணைந்து செயல்படும் பட்சத்தில், ஸ்மார்ட்போனின் பேட்டரி வாழ்க்கை ஒரு முழு நாள் முழுவதும் நீடிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.!

காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.!

வெளியாகப்போகும் ஒப்போ பைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய மேலும் பல அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் அப்டேட்ஸ்களுக்கு, ஜூன் 19-ஆம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது, அதற்கிடையில் வெளியாகும் லீக்ஸ் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பற்றிய விவரங்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ், இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Oppo Find X Teased to Sport Snapdragon 845 SoC, 8GB of RAM and 256GB of ROM. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X