உலகின் எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத ஒரு அம்சம் இதில் உள்ளது; என்னது அது.?

திரை விகிதத்தை பொறுத்தமட்டில், ஒப்போ பைண்ட் எக்ஸ் ஆனது விவோ நெக்ஸ்-ல் உள்ள அதே 19.3: 9 என்கிற அளவை கொண்டிருப்பதை காண முடிகிறது.

|

கடந்த சில வாரங்களாக லீக்ஸ் தகவல்களில் சிக்கி வரும் ஒப்போ நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் (முதன்மை சாதனம்) ஸ்மார்ட்போனான ஒப்போ பைண்ட் எக்ஸ் ஆனது 93.6% ஸ்க்ரீன்-டூ-பாடி என்கிற விகிதத்தை கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத ஒரு அம்சம் இதில் உள்ளது.!

இந்த தேதி வரை எந்த ஸ்மார்ட்போனிலும் உள்ள ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை விட இது மிக அதிகபட்சமான ஒரு அளவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெளியான விவோ நிறுவனம் வழியாக வெளியான விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 91.24% என்கிற அளவிலான ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் கொண்டு வெளியாக, அது தான் எந்த ஸ்மார்ட்போனிலும் உள்ள ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை விட அதிகபட்சமான அளவாக இருந்தது, தற்போது அந்த கிரீடமானது ஒப்போவின் தலைக்கு ஏறியுள்ளது.

ஸ்லைடிங் பிராண்ட்-பேஸிங் கேமரா.!

ஸ்லைடிங் பிராண்ட்-பேஸிங் கேமரா.!

ஆனால், திரை விகிதத்தை பொறுத்தமட்டில், ஒப்போ பைண்ட் எக்ஸ் ஆனது விவோ நெக்ஸ்-ல் உள்ள அதே 19.3: 9 என்கிற அளவை கொண்டிருப்பதை காண முடிகிறது. மற்ற அம்சங்கள் மீது நகரும் போது, ஒப்போ பைண்ட் எக்ஸ் ஆனது (ஒருவேளை) விவோ நெக்ஸில் காணப்படும் அதே ஸ்லைடிங் பிராண்ட்-பேஸிங் கேமராவை கொண்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சம் சார்ந்த எந்த உறுதிப்பாடும் ஒப்போ வழியாக கிடைக்கவில்லை.

பெய்ஸோஎலெக்ட்ரிக் இயர்பீஸ்.!

பெய்ஸோஎலெக்ட்ரிக் இயர்பீஸ்.!

இந்த புதிய ஸ்மார்ட்போனின் வழியாக ஒப்போ நிறுவனம், அல்ட்ராசோனிக் ப்ராக்ஸிமிட்டி சென்சார் (ultrasonic proximity sensor) மற்றும் பெய்ஸோஎலெக்ட்ரிக் இயர்பீஸ் (piezoelectric earpiece) போன்ற அம்சங்களை அறிமுகம் செய்யலாம். உடன் வெளியான சில லீக்ஸ் அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ பைண்ட் எக்ஸ் ஆனது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 6.4 இன்ச் முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டு வெளியாகும்.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு.!

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு.!

இது ஒரு சூப்பர் AMOLED டிஸ்பிளேவாக இருக்கும். ஆக இதில் டிஸ்பிளேவில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இந்த அம்சம் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் இடம்பெறும் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், அதனுடன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

3730mAh பேட்டரி.!

3730mAh பேட்டரி.!

பின்பக்கத்தை பொறுத்தவரை, ஸ்மார்ட்போனின் பின்புற பக்கமும் கண்ணாடி வடிவமைப்பை பெற்றுள்ளது. இது வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கு வழி வகுக்கும். ஒப்போ பைண்ட் எக்ஸ் ஆனது 186 கிராம் எடை மற்றும் 8 மிமீ தடிமன் அளவு என்று கணக்கிடப்படுகிறது. இதன் பேட்டரியானது 15 நிமிடங்களில் 2500mAh பேட்டரி அளவை சர்ஜி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சூப்பர் VOOC சார்ஜ் தொழில்நுட்பம் கொண்ட 3730mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.

25 எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா.!

25 எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா.!

கேமரா துறையை பொருத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு 25 எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் பின்புறத்தில் 5x ஜூம் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. நாளை (ஜூன் 19-ல்) நடக்கும் ஒரு நிகழ்வில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒப்போ பைண்ட் எக்ஸ் பற்றிய மேலும் பல அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Oppo Find X to Offer a Whopping 93.6% Screen-to-Body Ratio. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X