ஓப்போ ஃபைன்டு X: அதிக விலையில் அமைந்த சிறந்த தயாரிப்பு.!

முன்பக்கத்தை நோக்கிய கேமராவைப் பொறுத்த வரை, அட்டகாசமான 25MP கேமராவை பெற்றுள்ளது. இதை 3D ஸ்டீலத் கேமரா என்று ஓப்போ நிறுவனம் அழைக்கிறது.

|

தனது பிரிவில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களின் இடையே, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அழகான வளைவுகளுடன் கூடிய நாட்ச் இல்லாத முனைகளைக் கொண்ட டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்ட முன்னணி ஸ்மார்ட்போனாக ஓப்போ ஃபைன்டு X திகழ்கிறது. ரூ.59,990 என்ற விலை நிர்ணயத்தில் அமைந்த அதன் சிறப்பம்சங்களைக் குறித்து காண்போம்.

ஓப்போ ஃபைன்டு X: அதிக விலையில் அமைந்த சிறந்த தயாரிப்பு.!

ஓப்போ ஃபைன்டு X பார்வைக்கு வசீகரமாகவும், தொழில்நுட்பத்தில் புதுமையாகவும் உள்ளது. இதன் பாடி அளவில் 93.8 % சதவீதம் திரையைக் கொண்டிருப்பதால், நாட்ச் வடிவிலான டிஸ்ப்ளேக்களைக் கொண்டது என்ற ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் பெருமையான பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மோட்டாரில் இயங்கக் கூடிய சறுக்கும் கட்டமைப்பை கொண்ட இதில், இன்ஃப்ராரெட் கேமரா, மதிப்பு மிகுந்த சென்ஸர், ரிஸீவர், முன்பக்க கேமரா, டாட் பிராஜெக்ட்டர் மற்றும் பின்பக்கத்தில் உள்ள இரட்டை கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.


இதில் உள்ள மோட்டாரில் இயங்கும் கட்டமைப்பானது, ஃபோனை நீங்கள் அன்லாக் அல்லது கேமராவை இயக்கிய உடனேயே, தானாக இயங்க ஆரம்பித்து விடுகிறது. பயன்பாட்டில் இல்லாத போது, தானாக இயக்கத்தை நிறுத்தி கொள்கிறது. இணையச்சு வரிசையிலான சறுக்கல், சுழல் அமைப்பு மற்றும் அமைதியான ஒரு மோட்டார் ஆகியவை மூலம் புதுமையான மற்றும் எதிர்காலத்திற்கான வடிவமைப்பை தாங்கி உள்ளது.

அழகான மெட்டல்- கிளாஸ் கட்டமைப்பு

அழகான மெட்டல்- கிளாஸ் கட்டமைப்பு

கைகளில் வைத்திருக்கும் போதே, ஒரு மதிப்பு மிகுந்த தோற்றத்தை அளிக்கும் வகையில், மெட்டல் மற்றும் கிளாஸ் கட்டமைப்பை இது பெற்றுள்ளது. இதன் முன்பக்க மற்றும் பின்பக்கத்தில் உள்ள நேர்த்தியான வளைவுகளைப் பார்க்கும் போது, சாம்சங் நிறுவனத்தின் உயர்தர கேலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன்களை நினைவுப்படுத்துவதாக உள்ளது. மேலும் ஸ்மார்ட்போனை பிடிக்க தகுந்த பிடிமானமும், வளைந்த முனைகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 6.42 இன்ச் அளவிலான திரை இருந்தாலும், ஒரே கையில் எளிதாக இயக்கக் கூடிய வகையில் உள்ளது. இந்த ஃபோனின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருந்தாலும், நீர் மற்றும் மாசு பாதுகாப்பு அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. போர்டியாக்ஸ் ரெட் மற்றும் கிளாசியர் ப்ளூ ஆகிய நிறங்களில் கிடைக்கப் பெறுகின்றன.

டிஸ்ப்ளே:

டிஸ்ப்ளே:

ஓப்போ பைன்டு X இல் 6.42 இன்ச் அளவிலான இரட்டை ஆர்க் வடிவமைப்பிலான பனோராமிக் ஆர்க் ஸ்கிரீன் காணப்படுகிறது. முழு HD+ அமோல்டு டிஸ்ப்ளே சிறந்த தொடு உணர்வு கொண்டதாக உள்ளது. சிறப்பான நிறத்தன்மையோடு 19.5:9 அம்ச விகிதத்தில் அமைந்த விரிவான காட்சி கிடைக்கிறது. மெல்லிய முனைகளைக் கொண்டு இந்த ஃபோனின் இடது மற்றும் வலதுபுறங்களில் 1.65mm-மும், மேற்புறத்தில் 1.91mm-மும், கீழ்புறத்தில் 3.4mm-மும் பெற்றுள்ளது. பாடியின் அளவில் 93.8% திரையைப் பெற்றுள்ளதால், கேமிங் மற்றும் மல்டிமீடியா ப்ளேபேக் ஆகியவற்றிற்கு சிறப்பாக செயல்படுகிறது.

கேமரா:

கேமரா:

விவோ நிக்ஸ் ஃபோனில் உள்ளது போல இல்லாமல், ட்ரிபிள் லென்ஸ் கேமரா அமைப்பு கொண்ட செல்ஃபீ கேரமாவை கொண்டிருப்பதால், முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களுக்கு முழு தீர்வாக அமைகிறது. இதன் செயல்பாடு நம் கண்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பின்பக்கத்தில் உள்ள இரட்டை கேமராவை மோட்டாரில் இயங்கக்கூடிய அமைப்பு பயன்பாட்டில் இல்லாத போது மூடி கொள்கிறது. மேலும் இதில் முப்பரிமாண முக அடையாளம் காணும் அமைப்பில் ஐஆர் சென்ஸர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபோனின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மனித முகத்தில் உள்ள 15 ஆயிரம் அங்க அடையாளங்களை ஆராய்ந்து அறியும் தன்மையை, ஐஆர் சென்ஸர் பெற்றுள்ளது.


முன்பக்கத்தை நோக்கிய கேமராவைப் பொறுத்த வரை, அட்டகாசமான 25MP கேமராவை பெற்றுள்ளது. இதை 3D ஸ்டீலத் கேமரா என்று ஓப்போ நிறுவனம் அழைக்கிறது. செல்ஃபி கேமராவை பொறுத்த வரை, சோனி IMX576 சென்ஸர் மற்றும் f/2.0 துளையைப் பயன்படுத்துகிறது. இந்த செல்ஃபீ கேமரா மூலம் 296 முக அம்ச புள்ளிகளை கண்டறிய முடியும் என்பதோடு, ஐபோன் எக்ஸை போல போர்டிரிட் லைட்டிங் மோடுஸ் அமைப்பையும் கொண்டுள்ளது.

பின்பக்க கேமராவை பொறுத்த வரை, இதில் 16MP+20MP கேமரா அமைப்பு உடன் OIS (ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிளைஷேசன்)-யை கொண்டுள்ளது. புகைப்பட அனுபவத்தை சிறப்பானதாக மாற்ற, செயற்கை நுண்ணறிவை இந்த கேமரா பயன்படுத்துகிறது. இந்த பின்பக்க கேமராவால் 21 புகைப்பட முறைகளை கச்சிதமாக கண்டறிய முடியும் என்பதோடு, சிறப்பான வெளியீட்டை தானாக கண்டறியவும் முடியும் என்று ஓப்போ நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

ஹார்டுவேர்:

ஹார்டுவேர்:

ஓப்போ பைன்டு X இல் ஸ்னாப்டிராகன் 845 CPU மற்றும் 8GB ரேம் ஆகியவை மூலம் பன்முக பணிகளைச் செய்ய ஆற்றல் அளிக்கப்படுகிறது. இது தவிர, 128GB உள்ளக நினைவகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சாஃப்ட்வேர்:

சாஃப்ட்வேர்:

இது, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் ஓப்போவின் கலர் OS 5.1 இடைமுகத்தை பெற்று இயங்குகிறது. நீங்கள் ஏற்கனவே ஓப்போ ஃபோன்களை பயன்படுத்தி இருந்தால், அதை பயன்படுத்துவதில் அவ்வளவு கடினமாக உணரமாட்டீர்கள். ஆனால் வேறொரு ஆண்ட்ராய்டு ஃபோனில் இருந்து ஓப்போவிற்கு மாறுவதாக இருந்தால், தொடக்க காலத்தில் சற்று சிரமத்தை சந்திக்க வேண்டியதாகும்.

சில பெரிய சமரசத்துடன் கூடிய எதிர்காலத்திற்குரிய வடிவமைப்பு

சில பெரிய சமரசத்துடன் கூடிய எதிர்காலத்திற்குரிய வடிவமைப்பு

ஓப்போ பைன்டு X இல், சில அடிப்படை மொபைல் வடிவமைப்பு அம்சங்களான மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட், கைரேகை ஸ்கேனர், 3.5mm ஹெட்போன் ஜெக் ஆகியவை அளிக்கப்படவில்லை. கைரேகை ஸ்னேகர் இல்லாததால், முகத்தை கண்டறியும் தொழில்நுட்பத்தை முழுமையாக நம்ப வேண்டியுள்ளது. அதேபோல 3.5mm ஹெட்போன் ஜெக் இல்லாததால், ப்ளூடூத் ஹெட்போன்களையே பயன்படுத்த முடியும். மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் இல்லாததால், 128GB அளவிலான உள்ளக நினைவகத்தில் மட்டுமே, எல்லா காரியங்களையும் சேமிக்க முடியும்.

பேட்டரி மற்றும் இணைப்பு

பேட்டரி மற்றும் இணைப்பு

ஓப்போ பைன்டு X ஃபோனை, 3,730mAh பேட்டரி இயக்குகிறது. இந்த பேட்டரியில் VOOC விரைவு சார்ஜிங் தொழில்நுட்பம் இருப்பதால், வெறும் 5 நிமிட சார்ஜிங் மூலம் 2 மணிநேரம் வரை பேசுவதற்கு பயன்படுத்தலாம். இணைப்பை பொறுத்த வரை, வைஃபை, ப்ளூடூத் 5.0, USB வகை C போர்ட், FM, NFC, இரட்டை வோல்டி ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. விலை குறைப்பு நடவடிக்கையாக, வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் அளிக்கப்படவில்லை.

முடிவு

முடிவு

சாம்சங் மற்ரும் ஆப்பிள் போன்ர நிறுவனங்களின் சவால் மிகுந்த பிரிமியம் ஸ்மார்ட்போன் பிரிவில், ஓப்போ பைன்டு X என்பது மிகவும் புதுமையான மற்றும் திடமான ஒரு முயற்சியாக உள்ளது. ஆனால் பட்ஜெட் மற்றும் இடைப்பட்ட நிலையில் அமைந்த ஸ்மார்ட்போன்களை அதிகளவில் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பிற்கு ரூ.60 ஆயிரம் கொடுத்து வாங்க, முதல் பார்வையிலேயே வாடிக்கையாளர்கள் முன்வருவார்களா? என்பது யோசிக்க வேண்டியுள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO Find X First Impressions Extreme Innovation at a hefty price point: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X