Samsung, Apple-க்கு சேர்ந்த மாறி ஆப்பு.. 6500mAh பேட்டரி + 7.6-இன்ச் டிஸ்பிளே காம்பினேஷனில் புது OPPO போன்!
ஒப்போ (Oppo) நிறுவனம் ஆனது ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகிய இரண்டிற்கும் சேர்த்து ஆப்பு அடிக்கும் ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. அது ஒப்போவின் அடுத்த போல்டபிள் (Foldable) ஸ்மார்ட்போனான ஒப்போ பைண்ட் என்7 (Oppo Find N7) மாடல் ஆகும்.
இது வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 8 வைட் (Samsung Galaxy Z Fold 8 Wide) மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஐபோன் ஆன ஐபோன் அல்ட்ரா (iPhone Ultra) ஆகியவற்றை போலவே, இதுவும் அகலமான மடிக்கக்கூடிய வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று பல லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக, ஒப்போ பைண்ட் என்7 பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்ட தகவலின்படி, ஒப்போ பைண்ட் என்7 ஸ்மார்ட்போன் ஆனது 2என்எம் ஸ்னாப்டிராகன் பிளாக்ஷிப் சிப்செட் (flagship chipset) மூலம் சோதிக்கப்பட்டு வருகிறது
இது வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 (Snapdragon 8 Elite Gen 6) சிப்செட்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இதில் ஆன்-டிவைஸ் ஏஐ அக்ஸலரேட்டர் (on-device AI accelerator) வசதியும் சோதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கூடவே இந்த ஸ்மார்ட்போனில் "6" என்ற எண்ணில் தொடங்கும் திறன் கொண்ட பேட்டரியை (சுமார் 6,500mAh) பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டிசிஎஸ் குறிப்பிடுகிறார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், சாம்சங் (Samsung) மற்றும் ஆப்பிள் (Apple) நிறுவனங்களின் போல்டபிள் போன்களை விட என்7 பெரிய பேட்டரி திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்பக்கட்ட முன்மாதிரி (prototype) வடிவமைப்புகளில், இரண்டு விதமான கேமரா செட்டப் சோதிக்கப்படுவதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளார்: ஒன்று பாரம்பரியமான பெரிய வட்ட வடிவ கேமரா செட்டப், மற்றொன்று ஐபோன் ஏர் (iPhone Air) போன்ற கிடைமட்ட (horizontal) பாணியிலான கேமரா செட்டப்.
டிஸ்பிளேக்களை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் என்7 ஸ்மார்ட்போனில் 5.5-இன்ச் அவுட்டர் டிஸ்பிளே மற்றும் 7.6-இன்ச் இன்னர் டிஸ்பிளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் டிஸ்பிளே (Samsung Display - SDC) மற்றும் பிஓஇ (BOE) ஆகிய நிறுவனங்கள் இதற்கான பேனல்களை (panels) வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மேம்பட்ட 'hinge' (மடிப்புப் பகுதி) தொழில்நுட்பம், மடிக்கக்கூடிய திரையில் கிரீஸ் (crease) இல்லாத அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
ஒப்போ பைண்ட் என்7 ஸ்மார்ட்போன் ஆனது 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையானால், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சிப்செட் கொண்ட உலகின் முதல் போல்டபிள் போனாக இது அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.1,79,990 க்கு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்தியாவில் அறிமுகமான ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் மாடலின் விலை: இந்தியாவில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 6.59-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளே
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9000 சீரீஸ் சிப்செட்
- ஹேசல்பிளாட்-டியூன் செய்யப்பட்ட ரியர் கேமரா செட்டப்
- ட்ரிபிள் 50-மெகாபிக்சல் கேமராக்கள்
- 7025mAh பேட்டரி


Click it and Unblock the Notifications