Home
Mobile

வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்.. 200எம்பி கேமரா.. 8.12 இன்ச் டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒப்போ பைண்ட் என்6 (Oppo Find N6) ஃபோல்டபிள் போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம். கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய ஒப்போ போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ பைண்ட் என்6 அம்சங்கள் (OPPO Find N6 Specifications): 8.12-இன்ச் ஃபோல்டபிள் டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ பைண்ட் என்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவில் 2480 × 2248 பிக்சல்ஸ் வசதி உள்ளது. அதேபோல் இந்த போனில் 6.62-இன்ச் கவர் டிஸ்பிளேவும் இந்த போனில் உள்ளது. இந்த கவர் டிஸ்பிளேவில் 2616 × 1140 பிக்சல்ஸ் வசதி உள்ளது.

வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

குறிப்பாக இந்த போனில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதுவும் இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தரமான 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 5 எஸ்ஒசி (3nm octa-core Snapdragon 8 Elite Gen 5 SoC) உடன் புதிய ஒப்போ பைண்ட் என்6 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இந்த போனில் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ பைண்ட் என்6 போனின் பின்புறம் 200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் ஆகிய கேமராக்கள் உள்ளன. குறிப்பாக இந்த 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது இந்த போனின் கேமராக்கள். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த போனில் 4கே டால்பி விஷன் வீடியோ பதிவு செய்ய முடியும்.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), டூயல் சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்கள், IR கண்ட்ரோல் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் டீப் பிளாக், கோல்டன் ஆரஞ்சு மற்றும் ஒரிஜினல் டைட்டானியம் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ பைண்ட் என்6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

கலர்ஓஎஸ் 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய ஒப்போ பைண்ட் என்6 மாடல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆணட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 5ஜி, 4ஜி, வைஃபை, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, ஒடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஒப்போ பைண்ட் என்6 விலை

  • 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் என்6 போனின் விலை 9,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,32,755)
  • 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ பைண்ட் என்6 போனின் விலை 10,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,46,030)
  • 16ஜிபி ரேம் + 1டிபி கொண்ட ஒப்போ பைண்ட் என்6 (Satellite Communication Version) போனின் விலை 11,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,59,300)

வரும் மார்ச் 20-ம் தேதி இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find N6 with 200MP camera launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X