மார்க்கெட்டே மிரள போகுது.. 200எம்பி கேமரா.. 8.13-இன்ச் டிஸ்பிளே.. வருகிறது புது ஒப்போ போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் ஒப்போ பைண்ட் என்6 (Oppo Find N6) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் மார்ச் 17-ம் தேதி அன்று சீனாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ஒப்போ பைண்ட் என்6 அம்சங்கள் (Oppo Find N6 Specifications): 8.13-இன்ச் ஃபோல்டபிள் டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ பைண்ட் என்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனில் 6.62-இன்ச் கவர் டிஸ்பிளே வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதேசமயம் சிறந்த பாதுகாப்பு வசதி இதில் உள்ளது.

ஒப்போ பைண்ட் என்6 போனின் பின்புறம் 200எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா வசதி உள்ளது. எனவே இந்த போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
சக்திவாய்ந்த னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் ஒப்போ பைண்ட் என்6 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் புதிய ஒப்போ பைண்ட் என்6 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்போ பைண்ட் என்6 வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் ஒப்போ பைண்ட் என்6 மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனில் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ பைண்ட் என்6 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஒப்போ பைண்ட் என்6 மாடல் அறிமுகம் செய்யப்படும் பர்ப்பிள், பிளாக், ஒயிட் நிறங்களில் இந்த புதிய போன் வெளிவரும். அதேபோல் ஒப்போ பைண்ட் என்6 மாடல் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications