Home
Mobile

2 வாரம் பொறுங்க.. இப்படி ஒரு Slim ஆன போனை பார்த்து இருக்கவே மாட்டீங்க.. எந்த மாடல்?

ஒருவழியாக ஒப்போ பைண்ட் என்3 (Oppo Find N3) ஸ்மார்ட்போன் ஆனது எப்போது அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தேதி வெளியாகியுள்ளது. நேற்றுவரை "விரைவில் வரும்" என்றும், "2025 பிப்ரவரியில் வரும்" என்று கூறப்பட்ட ஒப்போ பைண்ட் என்3 ஸ்மார்ட்போனின் அறிமுகம் இன்னும் 2 வார இடைவெளியில் உள்ளது என்கிற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

சீனாவிற்கு வெளியே இது ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2) ஆக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஒப்போ பைண்ட் என்3 ஆனது இன்னும் 2 வாரங்களில் அறிமுகமாகும் என்று ஒப்போ நிறுவனத்தின் நிர்வாகி வெளிப்படுத்தி உள்ளார். அவர் சரியான வெளியீட்டுத் தேதி அறிவிக்கவில்லை என்றாலும் கூட பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதிகளில் இது வெளியிடப்படும் என்று சூசகமாக தெரிவித்து உள்ளார்.

இப்படி ஒரு Slim ஆன போனை பார்த்து இருக்கவே மாட்டீங்க.. எந்த மாடல்?

கடந்த சில வாரங்களாகவே ஒப்போ நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் பிஸியாக உள்ளனர். சமீபத்தில் ஒப்போ நிறுவனத்தின் வெளிநாட்டு சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவைகளின் தலைவர் ஆன பில்லி ஜாங், எக்ஸ் பக்கம் வழியாக பரபரப்பான ஒரு ஒப்பீட்டை செய்திருந்தார். ஒப்போ பைண்ட் என்5 இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டதிலேயே மிகவும் மெலிதான ஆப்பிள் டிவைஸ் உடன் ஒப்பிட்டு இருந்தார். அது எம்4 சிப் கொண்டு இயங்கும் ஐபேட் ப்ரோ மாடலாகும்.

ஆப்பிள் ஐபேட் ப்ரோ எம்4 மாடல் ஆனது 5.1மிமீ தடிமன் கொண்டதாக இருக்கிறது. ஆக வரவிருக்கும் ஒப்போ பைண்ட் என்5 / ஒன்பிளஸ் ஓப்பன் 2 மாடல் ஆனது அன்போல்ட் செய்யும் போது 4மிமீ தடிமனை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாக இருந்தால்,4.35 மிமீ உள்ள ஹானர் மேஜிக் வி3 ஸ்மார்ட்போனை பின்னுக்கு தள்ளி ஒப்போ பைண்ட் என்5 ஆனது உலகின் மிக மெலிதான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக மாறும்.

பெரும்பாலும் ஒப்போ பைண்ட் என்3 அறிமுகமாகும் அதே நாளில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 உலகளவில் அறிமுகம் செய்யப்படாது. ஆனால் ஒப்போ பைண்ட் என்3 ஸ்மார்ட்போனில் உள்ள பெரும்பாலான வடிவமைப்பு கூறுகள் மற்றும் அம்சங்களை இது பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இரண்டுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது 50W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் வரும் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 2கே ரெசல்யூஷன் உடனான 6.85-இன்ச் LTPO டிஸ்ப்ளேவை பேக் செய்யலாம். கேமராக்களை பொறுத்தவரை ஹாசல்பிளாட் தொழில்நுட்பத்துடன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple rear camera setup with Hasselblad technology) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஒப்பன் ஸ்மார்ட்போனில் கிடைக்கும் 4,805mAh பேட்டரியுடன் ஒப்பிடும்போது, புதிய மாடல் ஆனது பெரிய 5,900mAh பேட்டரியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது நீர் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்9 ரேட்டிங்கை பெறவும் வாய்ப்புள்ளது. விலையை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.1,39,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இந்திய விலையும் கூட ரூ.1.39,999 என்று தான் நிர்ணயம் செய்யப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட், 2268 x 2440 பிக்சல்ஸ் உடனான 7.82-இன்ச் 2கே Flexi-fluid LTPO 3.0 AMOLED இன்னர் டிஸ்பிளே, 6.31-இன்ச் (1116 x 2484 பிக்சல்ஸ்) 2கே LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED அவுட்டர் டிஸ்பிளே, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப், ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் கேமரா செட்டப். 4,800mAh பேட்டரியை (3295 + 1510mAh) மற்றும் 67W SuperVOOC சார்ஜிங் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find N5 Tipped Launch in February 19 or 20 Could be Launch as OnePlus Open 2 Globally
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X