பிப்.20.. வெறும் 4மிமீ தான்.. இந்த OPPO போன் மொத்த மொபைல் மார்க்கெட்டையும் தெறிக்க விடப்போகுது!
வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் வெளியீட்டு நிகழ்வில் ஒப்போ பைண்ட் என்5 (Oppo Find N5) போல்டபிள் ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒப்போவும், ஒன்பிளஸும் கூட்டு என்பதால், இந்தியாவில் இது ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2) ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும்.
ஏனென்றால் ஒப்போ பைண்ட் என்3 (Oppo Find N3) ஸ்மார்ட்போன் தான் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகமானது. அறியாதோர்களுக்கு ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ ஆகிய இரண்டும் வடிவமைப்பு மற்றும் பொறியியல் முயற்சிகளை பகிர்ந்து கொள்கின்றன, ஏனெனில் அவை இரண்டும் பிபிகே எலக்ட்ரானிக்ஸின் கீழ் செயல்படுகின்றன. இவ்விரு நிறுவனங்களுலு இடையே நீங்கள் பார்க்கும் முதன்மை வேறுபாடுகள் ஆனது - மென்பொருள் மற்றும் பிராண்டிங்கில் மட்டுமே இருக்கும்.

சரி ஒப்போ ஃபைண்ட் என்5 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு வருவோம். இது உலகின் மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்று ஒப்போ டீஸ் செய்து வருகிறது. அதை நம்பும் அளவிலான டீஸர் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இப்போதைக்கு மிகவும் மெலிதான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஹானர் மேஜிக் வி3 (Honor Magic V3) உள்ளது.
ஹானரின் இந்த ஸ்மார்ட்போன் விரிக்கப்படும் போது 4.35மிமீ அளவுடையதாக இருக்கிறது மற்றும் மடிக்கும்போது 9.2மிமீ அளவைக் கொண்டுள்ளது. ஒப்போ ஃபைண்ட் என்5 ஸ்மார்ட்போன் ஆனது விரிக்கப்படும் போது வெறும் 4மிமீ அளவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்லிம் ஆன டிசைனை தவிர்த்து இது கடந்த ஆண்டு வெளியான ஒப்போ ஃபைண்ட் என்3 அல்லது ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனை போன்றே தெரிகிறது.
அதாவது பைண்ட் என்5 மாடல் ஆனது அதே சர்குலர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது, மேலும் அதில் ஹாசல்பிளாட் கேமராக்கள் உள்ளன. கூடுதலாக, ஒப்போ ஃபைண்ட் என்5 ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் ஓப்பனில் நாம் பார்த்த சற்றே தடிமனான பெசல்களை கொண்டிருக்கும் என்பதையும் டீஸர் புகைப்படங்கள் வழியாக தெரிந்துகொள்ள முடிகிறது
ஒப்போ ஃபைண்ட் என்5 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது. மேலும் இது ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த 4,800mAh பேட்டரியில் இருந்து, ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போன் அந்த ஒரு பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கடைசியாக ஒப்போ ஃபைண்ட் என்5 ஸ்மார்ட்போன் அல்லது ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போன் ஆனது செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கு () ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றை விட முக்கியமான புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் ஓப்பனில் உள்ள பெரிய குறையான வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவின் பற்றாக்குறையை சரிசெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
ஒன்பிளஸ் ஓப்பன் அம்சங்கள்: இது 7.82-இன்ச் 2கே Flexi-fluid LTPO 3.0 AMOLED இன்னர் டிஸ்பிளே, 6.31-இன்ச் (1116 x 2484 பிக்சல்ஸ்) 2கே LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED அவுட்டர் டிஸ்பிளே, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப், 16GB LPDDR5x ரேம், 4ஜிபி, 8ஜிபி மற்றும் 12ஜிபி அளவில் விர்ச்சுவல் ரேம் ஆதரவை கொண்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை, ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. 48-மெகாபிக்சல் மெயின் கேமரா + 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 48-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா. கூடவே இன்னர் டிஸ்பிளேவில் 20-மெகாபிக்சல் மெயின் கேமரா, 32-மெகாபிக்சல் (செல்பீ) கேமராவும் உள்ளது. கடைசியாக 4,800mAh பேட்டரி, 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications








