மார்கெட் மிரளும்.. 2 டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. 512GB மெமரி.. 4300mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் (OPPO Find N3 Flip) போனின் விலை விவரங்கள் கசிந்துள்ளன. இரண்டு டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 12ஜிபி ரேம் போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட இந்த மாடலின் விவரங்கள் இதோ.
ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் அம்சங்கள் (OPPO Find N3 Flip Specifications): இந்த ஃபிளிப் போனில் 6.8 இன்ச் (2520 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஈ3 அமோலெட் (E6 AMOLED) மெயின் டிஸ்பிளே (Main Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

அதோடு 1440Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஸ்ஹோட் யுடிஜி கிளாஸ் (SCHOTT UTG Glass) டிஸ்பிளே பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 3.26 இன்ச் (720 × 382 பிக்சல்கள்) அமோலெட் அவுட்டர் டிஸ்பிளே (Outer Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200 4என்எம் (Octa Core Dimensity 9200 4nm) சிப்செட் வருகிறது. அதோடு கலர்ஓஎஸ் 13.2 (ColorOS 13.2) மற்றும் இம்மார்டலிஸ்-ஜி715 11 கோர் ஜிபியு (Immortalis-G715 11 Core GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனில் 12 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் உள்ளன. இந்த மாடலில் பிரம்மாண்ட ஹாசல்பிளாட் (Hasselblad) கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்90 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி பிரைமரி வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.
அதோடு சோனி ஐஎம்எக்ஸ்581 (Sony IMX581) சென்சாருடன் 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சாருடன் 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ ஃபிளிப் மாடலில் 44W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜ் சப்போர்ட் கொண்ட 4300mAh பேட்டரி வருகிறது.
இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த போன் 198 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் மாடலில் மூன்லைட் (Moonlight), ரோஸ் (Rose) மற்றும் பிளாக் (Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. அங்கு, இந்த போனின் 12 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.77,120ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.87,330ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மாண்ட பிரீமியம் அம்சங்களை கொண்டிருப்பதால், மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இதனால் மற்ற நாடுகளிலும், இந்த போனை ஓப்போ நிறுவனம் வெளியிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
அந்த வரிசையில் இந்தியாவில், இந்த போன் நாளை (அக்டோபர் 12) வெளியாகிறது. இதனிடையே அந்த போனின் இந்திய விலை விவரம் கசிந்துள்ளது. இங்கு இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.94,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, அறிமுக சலுகையில் ரூ.89,622க்கு விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








