ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் புதிய பிளிப் போனை களமிறக்கும் OPPO.. ரெடியா இருங்க..
ஒப்போ நிறுவனம் தரமான போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் ஒப்போ நிறுவனம் தனது ஃபைன்ட் என்2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. அதாவது விரைவில் ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் எனும் பெயரில் புதிய போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஃபைன்ட் என்2 பிளிப் மாடல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் விரைவில் அறிமுகமாகும் இந்த போன் கிளாம்ஷெல் போன்ற மடிக்கக்கூடிய டிசைன் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த போன் சாம்சங் பிளிப் போனுக்கு போட்டியாக வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த ஃபைன்ட் என்3 பிளிப் மாடலின் கேமரா செட்டப் சற்று வித்தியாசமாக வழங்கப்படும் என்று ஒப்போ நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்களில் பெரிய டிஸ்பிளே வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இணையத்தில் வெளியான இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஃபைன்ட் என்3 பிளிப் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் வெளிப்புறம் 3.26-இன்ச் டிஸ்பிளேவும் உள்ளது. குறிப்பாக இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிமுகமாகும் இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 பிளஸ் சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும்.
ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 32எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

4300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் அறிமகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 5ஜி, வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications