Home
Mobile

அதிரவிடும் பட்ஜெட்.. 2 டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. மிரட்டலான ஒப்போ போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் சாம்சங் பிளிப் போன்களுக்கு போட்டியாக இந்த ஒப்போ பிளிப் போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் (Oppo Find N3 Flip) போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. இந்த பெரிய டிஸ்பிளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. இத்துடன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 3.26-இன்ச் கவர் டிஸ்பிளே வசதியும் இந்த போனில் உள்ளது.

 50எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. மிரட்டலான ஒப்போ போன்.. எந்த மாடல்?

குறிப்பாக ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஃப்ளிப் போன் ரெயின்லாந்து சான்று பெற்று இருப்பதாக ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 32எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான போன் வெளிவந்துள்ளது.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றம் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன். எனவே இந்த பிளிப் போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ பிளிப் போன்.

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 (octa-core MediaTek Dimensity 9200) பிராசஸர் மற்றும் இமார்டலிஸ் G715 11-கோர் GPU வசதியுடன் ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பிளிப் போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேசமயம் கலர்ஒ.எஸ். 13.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த பிளிப் போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் வாங்க கிடைக்கும். மேலும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ பிளிப் போன். அதேபோல் மூன்லைட், ரோஸ் மற்றும் பிளாக் நிறங்களில் ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 50எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. மிரட்டலான ஒப்போ போன்.. எந்த மாடல்?

44 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவு கொண்ட 4300 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன். எனவே இந்த பிளிப் போனை விரைவாக சார்ஜ் செயதுவிட முடியும். மேலும் இந்த ஒப்போ போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் பிளிப் போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் பிளிப் போனின் ஆரம்ப விலை 6799 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ.77,120). செப்டம்பர் 8-ம் தேதி இந்த ஒப்போ போன் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find N3 Flip with 3.26-Inch Cover Display Launched: check price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X