ஆட்டமே வேற.. 50எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. அக்.12-ல் இந்தியாவுக்கு வரும் புது ஒப்போ போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து தனித்துவமான போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. அதேபோல் தற்போது ஒப்போ நிறுவனம் மலிவு விலையில் போன்களை அறிமுகம் செய்வதில்லை. அதாவது இந்நிறுவனம் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில தான் போன்களை அறிமுகம் செய்கிறது.
இந்நிலையில் ஒப்போ நிறுவனம் விரைவில் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் அக்டோபர் 12-ம் தேதி இந்தியாவில் ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் (Oppo Find N3 Flip) போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 12-ம் தேதி இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் (Oppo Find N3 Flip) போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. இந்த பெரிய டிஸ்பிளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. இத்துடன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 3.26-இன்ச் கவர் டிஸ்பிளே வசதியும் இந்த போனில் உள்ளது.
ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு கொண்டு வெளிவரும். மேலும் இதன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் 50எம்பி பிரைமரி கேமரா +48எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 32எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான போன் வெளிவரும்.
எல்இடி பிளாஷ் மற்றம் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன். எனவே இந்த பிளிப் போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஒப்போ பிளிப் போன்.
கலர்ஒ.எஸ். 13.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவரும் இந்த பிளிப் போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஆக்டோ கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 (octa-core MediaTek Dimensity 9200) பிராசஸர் மற்றும் இமார்டலிஸ் G715 11-கோர் GPU வசதியுடன் ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த பிளிப் போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் வாங்கக் கிடைக்கும். மேலும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ பிளிப் போன். அதேபோல் மூன்லைட், ரோஸ் மற்றும் பிளாக் நிறங்களில் ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் அறிமுகம் செய்யப்படும்
44 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவு கொண்ட 4300 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன். எனவே இந்த பிளிப் போனை விரைவாக சார்ஜ் செயதுவிட முடியும். மேலும் இந்த ஒப்போ போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. 5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் பிளிப் போன்.


Click it and Unblock the Notifications








