Home
Mobile

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்: தொழில்துறையின் முதல் ட்ரிபிள் கேமரா செட்டப், கண்ணுக்கு தெரியாத க்ரீஸ்!

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்: முதல் ட்ரிபிள் கேமரா செட்டப்!

மொபைல் சந்தையில் பல வகையான ஃபோல்டபிள் போன்கள் அறிமுகமாவதை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும் இந்த அளவிற்கு பெர்ஃபெக்ட் ஆன ஃபிளிப் போனை இதற்கு முன் நீங்கள் பார்த்திருக்க மாட்டோம்.

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் அதன் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு, முழுமையாக செயல்படும் கவர் டிஸ்பிளே, தொழில்துறையின் முதல் ட்ரிபிள் கேமரா செட்டப் மற்றும் கண்ணுக்கு தெரியாத க்ரீஸ் என. இதுவொரு முழுமையான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் கடந்த சில நாட்களாக ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகிறோம், இதை பயன்படுத்துவது எவ்வளவு தடையற்றதாக இருந்தது என்பதை பற்றி கண்டிப்பாக பேசியே ஆகவேண்டும்.

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்: முதல் ட்ரிபிள் கேமரா செட்டப்!

குறைபாடற்ற வடிவமைப்பு:

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஆனது பன்க்ஷனல் ஆகவும் உள்ளது கூடவே கவர்ச்சிகரமானதாக இருக்கும் வகையில் மிகவும் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு கலர் ஆப்ஷன்களில் வருகிறது - கிரீம் கோல்ட் மற்றும் ஸ்லீக் பிளாக். முதல் பார்வையிலேயே, ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஒரு அற்புதமான அழகியலுடன் சூப்பர் கிளாஸியாக தெரிகிறது. இதன் புத்திசாலித்தனமான வெர்டிகல் கவர் டிஸ்பிளேவானது ஒரு வழக்கமான ஸ்மார்ட்போன் டிஸ்பிளே செய்யும் வேலைகளை கவனித்துக்கொள்கிறது. இது உண்மையிலேயே மிகவும் புத்திசாலித்தனமான செயல்பாடாகும், ஏனெனில் பெரும்பாலான ஆப்ஸ் மற்றும் கேம்கள் இந்த கவர் டிஸ்பிளேவில் இயல்பாக இயங்க முடியும்.

ஃபைண்ட் என்3 ஃபிளிப்பை கையில் வைத்திருப்பது மகிழ்ச்சிதரமானதாக இருக்கிறது. கிளாஸ் மற்றும் மெட்டல் கேஸ் ஆனது மிகவும் வசதியாக பிடித்திக்கொள்ள ஏதுவாக வளைக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் பின்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பும் உள்ளது. இந்த போன் ஏர்கிராஃப்ட்-கிரேட் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கோர்-ஐ பயன்படுத்துகிறது, இது ட்ராப்களில் 25% முன்னேற்றத்தையும், தீவிர வெப்பநிலையில் மேம்படுத்தப்பட்ட ரெசிஸ்டென்ஸையும் உறுதி செய்கிறது.

ஃப்ளெக்ஷன் ஹிஞ் ஆனது ரீஃபைன்டு செய்யப்பட்டு, இன்னும் பலமானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒப்போவின் இந்த ஸ்மார்ட்போன் டியுவி ரெயின்லேண்ட் ரிலையபிள் ஃபோல்டிங் சான்றிதழை பெற்றுள்ளது, இது 6,00,000 ஃபோல்ட்களை தாங்கும் வகையில் சுயாதீனமாக சோதிக்கப்பட்டது என்பதை குறிக்கிறது, இது 16 ஆண்டுகளுக்கும் மேலான பயன்பாட்டிற்கு சமமானதாகும்.

ஃபைண்ட் என்3 ஃபிளிப்பின் சிக்னேச்சர் லுக் அதன் கேமரா செட்டப்பில், சிக்கலான ஸ்டார்லைட் டிராக்கால் வடிவமைக்கப்பட்டுள்ள அதன் அற்புதமான காஸ்மோஸ் ரிங்கில் உள்ளது. ஃபிளாக்ஷிப்-கிரேடு கேமரா ஸ்டேக்கிற்கு கூடுதல் கவனத்தை ஈர்க்கவே ஒப்போ நிறுவனமானது, இந்த வடிவமைப்பு அணுகுமுறையை எடுத்துள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம். இதுமட்டுமல்ல, இன்னும் நிறைய உள்ளது!

இதன் ஃபங்ஷனலிட்டிக்கு கூடுதல் பலத்தை சேர்ப்பது - புதிய அலெர்ட் ஸ்லைடர் அம்சமே ஆகும், இது ஸ்மார்ட்போனை பார்க்க வேண்டிய அவசியமின்றி சைலன்ட், வைப்ரேட் மற்றும் ரிங் மோட்களுக்கு இடையில் மாற பயன்படுகிறது. இந்த ஸ்லைடர் தெளிவான ஹாப்டிக் ஃபீட்பேக் உடன் இணைக்கப்பட்டுள்ளது, அது மிகவும் திருப்திகரமாக உள்ளது. நோ வைப்ரேஷன் என்றால் சைலன்ட் என்று அர்த்தம். வைப்ரேட்டின் ஒரு சிறிய பல்ஸ் ஆனது வைப்ரேட்டை குறிக்கிறது, அதே நேரத்தில் நீண்ட வைப்ரேட் ரிங்கிங்கில் இருப்பதை குறிக்கிறது.

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்: முதல் ட்ரிபிள் கேமரா செட்டப்!

மோஸ்ட் ஃபங்க்ஸ்னல் கவர் டிஸ்பிளே:

இந்த ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனானது, முதல் ஸ்போர்ட் வெர்டிகல் கவர் ஸ்கிரீன் கொண்ட மாடலாகும். இது, கவர் ஸ்கிரீனில் மூன்று விட்ஜெட்களை மட்டும் அனுமதிப்பது அல்லது ஆல்வேய் ஆன் டிஸ்பிளேவாக இருப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக மெயின் ஸ்கிரீனின் செயல்திறனையும் பிரதிபலிக்கும் வகையில் புரட்சிகரமாக இருக்கிறது.

இந்த ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனின் கவர் ஸ்கிரீனானது, 40+ தேர்ட் பார்ட்டி ஆப்களுக்கு இடமளிக்கூடியது. சிங்கிள் டேப்பில் மினி லைப்ரரி மூலம் அனைத்து ஆப்களின் பனோராமிக் வியூவை பெறலாம். இந்த ஸ்கிரீனின் யூஐ அதிக செயல்திறனுக்காக ஆப்டிமைஸ்டு செய்யப்பட்டுள்ளது. இப்போது, விட்ஜெட்டுகள், 3டி இன்டர்ஆக்டிவ் பெட்ஸ், லைவ் வெதர் வால்பேப்பர், ஜிஃப் வால்பேப்பர் மற்றும் எடிட்டபிள் கவர் ஸ்கிரீன் ஸ்டைல்ஸ் ஆகியவற்றை மெருகூட்டலாம். இது உள்ளூணர்வு சார்ந்தது, கிளாசி அதே வேளையில் மிகவும் ஃபங்க்ஸ்னல் கொண்டது.

ஓப்போவானது, பிரபல ஆப்களான ஜிமெயில், மேப்ஸ், ரெட்டிட், டெலிகிராம், எக்ஸ், வாட்ஸ்அப் போன்றவற்றை ஸ்கிரீனில் குறைபாடற்ற முறையில் செயல்படுவதை மேம்படுத்தியிருக்கிறது. இதற்காக வெர்டிகல் ஷேப் கவர் ஸ்கிரீனுக்கு நன்றி சொல்லலாம். இது மற்ற ஃபிளிப் ஃபோன்களில் நாம் பார்த்த டிசைன்களில் இருந்து மிகவும் முன்னதாக இருக்கிறது. ஓப்போவானது, கேமரா சென்சாரின் அளவை குறைக்காமலும், கேமராவை கார்னரில் தள்ளி வைக்காமலும், டிஸ்பிளேவில் கேமரா கட்டாகாமலும் டிசைனை செய்து முடித்துள்ளது.

நோ க்ரீஸ்!

போல்ட் செய்யப்பட்டபோது, 6.8 இன்ச் 120 ஹெர்ட்ஸ் மெயின் டிஸ்ப்ளேவானது, ஸ்மூத் மற்றும் வைப்ரன்ட் கொண்டதாக இருக்கிறது. அதே வேளையில் மூவிஸ், கேம்ஸ் மற்றும் ஃபுல் ஸ்கிரீன் அனுபவத்தை ஆடம்பரமாக கொடுக்ககூடியது. அதோடு விரல் அல்லது கட்டை விரலுக்கு கீழே ரிப்பிள் ஃப்ரீ கிளாஸ் அப்பியரன்ஸ், மிகவும் ஸ்மூதர் ஃபிலீங் கொடுக்கக்கூடியது. இவை அனைத்துக்கும் ஓப்போவின் புதிய பிளிக்சின் ஹின்ச்க்கு நன்றி. இது ஸ்கிரீனை மூடும் போது துல்லியமான வாட்டர்-டிராப் ஷேப்பை கொடுக்கிறது. இதன் ரிசல்ட் சப்ட்லர் க்ரீஸ் ஆங்கிள் கிடைக்கிறது.

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்: முதல் ட்ரிபிள் கேமரா செட்டப்!

பெஸ்ட்-இன்-கிளாஸ் டிரிபிள் கேமராக்கள் கொண்ட ஒரே ஃபிளிப் போன்:

ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனானது, தொழில்துறையின் முதல் டிரிபிள்-கேமரா ஃபிளிப் போனாகும். ஒப்போவானது, ஐகானிக் கேமரா பிராண்டான ஹசல்பிளாட் உடன் கைக்கோர்த்து ஃபிளாக்ஷிப்-கிரேடு கேமரா சிஸ்டத்தை பேக் செய்து, அனைத்து ஃபிளிப் போன்களையும்விட சிறந்த கேமரா சிஸ்டத்தை உருவாக்கியிருக்கிறது. போர்ட்ராய்ட் மற்றும் ஜூம் செய்ய டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்ட ஒரே ஃபிளிப் ஃபோன் இதுவாகும்.

இந்த கேமரா சிஸ்டமானது, 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 பிரைமரி கேமராவை, ஓஐஎஸ் உடன் அப்கிரேட் செய்யப்பட்டிருப்பதாகும். இப்போது, இந்த பிரைமரி கேமராவில், வைபரென்ட் மற்றும் கப்ரேஹென்சிவ் டைனமிக் ரேஞ்ச் கொண்ட நேச்சுரல் கலர்களுடன் சூட் செய்ய முடியும். அதோடு 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்581 அல்ட்ரா வைடு கேமராவாது, 114 டிகிரி போவ் உடன் கூடுதல் ஷேடோ மற்றும் குறைந்த பேக்கிரவுண்ட் நாய்ஸ் கொண்ட கேப்சரை கொடுக்கும். 2எஸ்க் ஆப்டிகல் ஜூம் கொண்ட முதல் 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்709 டெலிபோட்டோ போர்ட்ராய்டு கேமராவானது, ஃபைவ் டைம்ஸ் விர்ச்சுவலி லாஸ்லெஸ் ஹைப்ரிட் ஜூம்மிங்கை வழங்குவதன் மூலம் ஃபர்ஸ்ட் ட்ரூலி வெர்சடைல் கேமரா சிஸ்டம் கொண்ட ஃபிளிப் போனை உருவாக்குகிறது. இதன் ஃபார்ம் பேக்டரை பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், இதன் டிரிபிள் கேமரா செட்டப்பானது, செல்ஃபி எடுக்க மட்டுமல்லாமல், விலாக்கிங் செய்யவும் மிகவும் ஃபவர்புல்லான போன்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அல்ட்ராவைடு ஆங்கிள் மற்றும் அல்ட்ரா-ஹை ரெசொலூஷன் கேமராக்களானது, மல்டி-பர்ஷன் போட்டோகிராபிக்கு சவுண்ட் சப்போர்ட் வழங்குகிறது. அதோடு 32 எம்பி சோனி ஐஎம்எஸ்709 செல்பீ கேமராவானது, இன்னர்-டிஸ்பிளேவில் ஃபர்பெக்ட் வீடியோ காலிங் அனுபவத்தை கொடுக்கிறது.

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்: முதல் ட்ரிபிள் கேமரா செட்டப்!

மல்டி-ஆங்கிள் ஃப்ளிக்ஸ்ஃபார்ம் கேமரா உடன், ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனானது, போட்டோகிராபியின் படைப்பு சுதந்திரத்தின் சுருக்கமாகும். நீங்கள் கவர் ஸ்கிரீனில் ப்ரீவியூ போட்டோக்களை பார்த்துக்கொள்ளலாம். உங்கள் உள்ளங்கையை ஸ்னாப் செய்து ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஷாட்களை எடுக்கலாம். அதோடு டிரைபாட் போன்ற ஸ்டெபிலிடிட்டியை பாதியாக போல்ட் செய்யும்போது பெறலாம்.

இதன் ரிசல்ட், டிரிபிள்-கேமரா செட்டப்பை லாங்-எக்ஸ்போஷர் ஷாட்கள், டைம்-லேப்ஸ் வீடியோக்கள் மற்றும் பலவற்றுக்கு ஏற்றதாக மாற்றுகிறது. இந்த கேமராவானது, இமேஜ் ப்ராஸசிங், நேச்சுரல் கலர் அப்பியரிங் ரிசல்ட் மற்றும் டையனாமிக் ரேஞ்ச் நுணுக்கம் ஆகியவற்றை மேம்படுத்த ஓப்போவின் வைட்டலிட்டி எஞ்சினை விரிவாக பயன்படுத்துகிறது.

இந்த டிரிபிள் கேமரா செட்டப், பிரத்யேகமான ஹசல்பிளாட் பீச்சர்களான எச்என்சிஎஸ், எக்ஸ்பிஏன் கிளாசிக் ரெட்ரோ ஸ்டைல் மோட்களையும், இம்மெர்சிவ் எக்ஸ்பீரியன்ஸ்க்காக மாஸ்டர் ஸ்டைலையும் கொண்டுள்ளது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், ஃபிளிப் ஃபோன் கேமராவில், இப்போதைக்கு இதைவிட சிறந்ததாக எந்தவொரு கேமராவும் இருக்க முடியாது.

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்: முதல் ட்ரிபிள் கேமரா செட்டப்!

அதிவேக செயல்திறன்:

தினசரி இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போனை பயன்படுத்திய போது, இது எவ்வளவு வேகமாகவும் மென்மையாகவும் பயன்பாட்டில் இருந்ததை கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம். குறிப்பாக இந்த போனில் உள்ள சிப்செட் மற்றும், கேமரா போன்றவற்றில் மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த போனை எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும் வெப்பமடையாது. அதாவது இந்த போன் குளிர்ச்சியாகவே செயல்படும். இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் மேம்பட்ட அதிவேக செயல்திறன் வழங்குகிறது ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன்.

முதன்மையான மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப்செட் மூலம் தான் இயங்குகிறது இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன். இந்த போனில் தடையின்றி பல்வேறு வேலைகளைச் செய்ய முடியும். அனைத்து கேமிங் ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் 4கே வீடியோக்களை கூட இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போனில் எளிமையாக எடிட் செய்யலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் பொருத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் அதிநவீனமானவை. அதேபோல் டிஸ்பிளே அடாப்டிவ் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் இணைந்து தரமான செயல்திறனை வழங்குகிறது இந்த போன். குறிப்பாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் இருப்பதால் இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாகவும், வேகமாகவும் இருக்கும்.

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்: முதல் ட்ரிபிள் கேமரா செட்டப்!

நாள் முழுவதும் பேட்டரி:

ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் ஆனதநாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதாவது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் ஆனது 4300 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்து. இது பிளிப் போனில் உள்ள மிகப்பெரிய பேட்டரி ஆகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் சூப்பர்வூக்டிஎம் சார்ஜிங் வசதி உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்த முடியும். பின்பு 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 56 நிமிடங்களில் 0-100 சதவீதம் பேட்டரி சார்ஜ் செய்துவிடும். அதேபோல் இதை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 21 சதவீதம் சார்ஜ் ஆகும். 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 58 சதவீதம் சார்ஜ் ஆகும்.

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்: முதல் ட்ரிபிள் கேமரா செட்டப்!

எங்கள் கருத்து:

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த ஃபிலிப் போன் என்பதை நிரூபிப்பது மிகவும் சுலபமான காரியமாகிவிட்டது. இதன் கண்ணனுக்கு தெரியாத டிஸ்பிளே விளிம்புகள், டிஸ்பிளேவின் ஆற்றல், ஸ்பீட், ஸ்மூத் மற்றும் தரமான பெர்பார்மென்ஸ் என்று எல்லா வட்டத்திலும் இந்த போன் ரவுண்ட் கட்டி அடிக்கிறது. இதன் நேர்த்தியான டிசைன் மற்றும் வடிவமைப்பு ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனை மற்ற ஃபிளிப் போன்களுக்கு மத்தியில் தனித்து நிற்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.94,999 என்ற விலையுடன் வருகிறது. தற்போது கிடைக்கும் சில சலுகை மற்றும் கேஷ் பேக் நன்மைகளை கொண்டு இதன் விலை ரூ.82,999 என்ற விலை வரை குறைகிறது. இது இப்போது பிளிப்கார்ட் மற்றும் ஒப்போவின் அதிகாரப்பூர்வ ரீடைல் ஸ்டோர்கள் வழியாக அக்டோபர் 22ம் தேதி மாலை 6 மணி முதல் வாங்க கிடைக்கும். அறிமுகம் சலுகையாக இத்துடன் இன்னும் சில சலுகைகளை நிறுவனம் வழங்கியுள்ளது. அதை #BestFlipEver போன் வாங்கும் போது கவனிக்க மறக்காதீர்கள்.

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்: முதல் ட்ரிபிள் கேமரா செட்டப்!

சலுகைகள்:

ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் வாங்கும் போது கிடைக்கும் சலுகைகளை பற்றி இப்போது பார்க்கலாம். இந்த போனை வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் சலுகை மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ போன்ற நன்மைகளை பெற முடியும். ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ கார்டு பயனர்கள், பஜாஜ் ஃபின்சர்வ் வங்கி, டிவிஎஸ் கிரெடிட், கோடக் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், எச்டிபி ஃபைனான்சியல் சர்வீசஸ் மற்றும் மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து 24 மாதங்கள் வரை ரூ.12,000 வரை கேஷ்பேக்கை பெறலாம். இது ஒப்போ ஸ்டார் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

பிளிப்கார்ட் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ, ஆக்சிஸ் மற்றும் கோடாக் வங்கி பயனர்களாக இருக்கும் போது, 12 மாத கால நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் மற்றும் ரூ. 12,000 வரை கேஷ்பேக் நன்மையை பெறலாம். ஒப்போ போன்களை எக்ஸ்சேஞ் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.8,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் நன்மையை பெறலாம். போன் வாங்கிய தேதியிலிருந்து 6 மாதங்கள் வரை, ஒரு முறை மட்டும் முழு டிஸ்பிளே மாற்றத்தைப் பெற முடியும். இந்த சலுகையா அக்டோபர் 29, 2023 வரை மட்டுமே கிடைக்கும்.

ஒப்போ பிரீமியம் சர்வீஸ் சலுகை:

- ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிலிப் உடன் சர்வதேச உத்தரவாத உரிமை கிடைக்கிறது.

- ஒப்போ ரெப்ரெஷ் சேவையானது, பயனர்கள் தங்கள் ஸ்கிரீன் கார்டு மற்றும் ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்பின் பேக் பேனல்களை 2 முறை வாரன்டி காலத்திற்குள் மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது.

- சேவை மற்றும் பழுதுபார்ப்புக்கான இஎம்ஐ திட்டங்களை ஒப்போ அறிமுகப்படுத்தியுள்ளது.

- வசதிக்கேற்ப இஎம்ஐ இஸ்ன்டால்மெண்ட் தேர்வு.

- தற்செயலான சேதம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் டிஸ்பிளேவின் முதல் ரிப்பேர் சமயத்தில் 15% தள்ளுபடியைப் பெறலாம் (இதற்கு T&C பொருந்தும்).
வாட்ஸ்அப் மூலம் ஒப்போ எக்ஸ்பெர்ட்களை அணுகி, பயனர்கள் ஆன்லைனில் ஒன்-ஆன்-ஒன் சேவையை பெறலாம்.

- 25,000+ இந்திய பின் குறியீடுகளுடன் ஒப்போ செயல்படுகிறது. உங்கள் போனில் உள்ள பழுதுகள் 72 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டு இலவச பிக்-அப் மற்றும் டிராப் செய்யப்படும் வசதியையும் வழங்குகிறது.

- தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை மையங்களில் ஃபிளாஷ் ஃபிக்ஸ் முறையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சிக்கல்களில் உங்கள் ஃபிளிப் சாதனத்தை 2 மணிநேரத்திற்குள் ஒப்போ பழுதுபார்க்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find N3 Flip Runs Ahead of the Pack With Industry s First Triple Camera setup Invisible Crease
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X