OnePlus Open-ஐ விட கம்மி விலையில் Oppo Find N3 Flip போன்.. என்ன விலை, எப்போது விற்பனை, என்னென்ன அம்சங்கள்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ரூ.1.39,99 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு, முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில், ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் (Oppo Find N3 Flip) போனின் இந்திய விற்பனையும் கூடிய விரைவில் தொடங்கவுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் என்ன? இந்த ஸ்மார்ட்போன் எப்போது முதல் வாங்க கிடைக்கும்? இந்த போனின் மீது அறிமுக சலுகைகள் உண்டா? ஒப்போவின் இந்த லேட்டஸ்ட் பிளிப் போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

விலை மற்றும் விற்பனை தேதி: ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.94,999 ஆகும். இது வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி மாலை 6 மணி முதல், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும்.
சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்: ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டுகள், பஜாஜ் ஃபின்சர்வ், டிவிஎஸ் கிரெடிட், கோடக் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், எச்டிபி ஃபைனான்சியல் சர்வீசஸ், ஒப்போ ஸ்டோர் மற்றும் மெயின்லைன் ரீடெய்ல் அவுட்லெட்களில் இருந்து ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்பை வாங்கினால் 24 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ (No-cost EMI) மற்றும் ரூ.12,000 வரை கேஷ்பேக் (Cashback) கிடைக்கும்.
பிளிப்கார்ட் (Flipkart) மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் வங்கி ஆகியவற்றிலிருந்து 12 மாத நோ-காஸ்ட் இஎம்ஐ மற்றும் ரூ.12,000 வரையிலான கேஷ்பேக்கை பெறலாம். நீங்கள் ஏற்கனவே ஒரு ஒப்போ வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ரூ.8,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்.
ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனின் அம்சங்கள்: இது 1ஹெர்ட்ஸ் - 120ஹெர்ட்ஸ் வரையிலான டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் (Dynamic Refresh Rate), 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.8-இன்ச் ஃபுல்-எச்டி எல்டிபிஓ அமோஎல்இடி இன்னர் டிஸ்பிளேவையும் (AMOLED Inner Display), 900 நிட்ஸ் பீட்ஸ் பிரைட்னஸ் உடனான 3.26-இன்ச் அமோஎல்இடி கவர் டிஸ்பிளேவையும் (Cover Display) கொண்டுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஏஆர்எம் இம்மார்ட்டலிஸ்-ஜி715 எம்சி11 ஜிபியு உடனான 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப் (MediaTek Dimensity 9200 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 12ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 256ஜிபி யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனின் கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அதில் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் மற்றும் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்581 சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 48எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32எம்பி டெலிஃபோட்டோ கேமரா உள்ளன.
செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனில் சோனி ஐஎம்எக்ஸ்709 ஆர்ஜிபிடபுள்யூ சென்சார் மற்றும் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 32எம்பி கேமரா உள்ளது. இந்த கேமரா ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனின் இன்னர் டிஸ்பிளேவில் அமைந்துள்ளது.
டால்பி அட்மோஸ் ஆதரவு உடனான டூயல் ஸ்பீக்கர்களுடன் வரும் ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7, ப்ளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 44வாட் சூப்பர்வூக் சார்ஜிங்கிற்கான (SuperVOOC) ஆதரவுடன் 4300எம்ஏஎச் பேட்டரி போன்றவைகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications








