இவ்ளோ கம்மியா கொடுத்தா நான் எங்க போறது? ஷாக்கில் சுந்தர் பிச்சை.. புதிய OPPO Flip போன் இந்தியாவில் அறிமுகம்!
யாருக்கு தெரியும்? இந்நேரத்திற்கு.. "இவ்ளோ கம்மி விலைக்கு அறிமுகம் செஞ்சா.. என் கம்பெனியோட ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை யாரு வாங்குவா?" என்று சுந்தர் பிச்சை புலம்பி கொண்டிருக்கலாம். ஏனென்றால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனின் விலை அப்படி!
வாடிக்கையாளர்கள் மத்தியில் ஃபோல்டபிள் (Foldable) மற்றும் ஃபிளிப் (Flip) போன்களுக்கு கிடைக்கும் வரவேற்பினை மனதில்கொண்டு பெரும்பாலான நிறுவனங்கள் மடங்கக்கூடிய அல்லது மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பணியாற்றி வருகின்றன. அப்படியாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் தான் - கூகுள் பிக்சல் ஃபோல்ட் (Google Pixel Fold)!

கூகுளின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான இது கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.1,47,490 முதல் தொடங்கி ரூ.1,57,300 வரை செல்கிறது. இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற அக்.19 ஆம் தேதியன்று அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்கிடையில் தான் ஒப்போ நிறுவனம், அதன் லேட்டஸ்ட் கிளாம்ஷெல்-ஸ்டைல் ஃபோல்டபிள் (Clamshell-style Foldable) ஸ்மார்ட்போனான ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, ஏற்கனவே வெளியாகிவிட்ட பிக்சல் ஃபோல்ட்டிற்கு மட்டுமல்ல வரவிருக்கும் ஒன்பிளஸ் ஒப்பனுக்கும் பெரிய மண்டை குடைச்சலாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.
ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனின் அம்சங்கள்: இது 1080 x 2520 பிக்சல்ஸ், 1Hz மற்றும் 120Hz வரையிலான டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.8-இன்ச் ஃபுல்-எச்டி LTPO AMOLED இன்னர் டிஸ்பிளேவையும், 382 x 720 பிக்சல்ஸ், 900 நிட்ஸ் பீட்ஸ் பிரைட்னஸ் உடனான 3.26-இன்ச் AMOLED கவர் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ARM Immortalis-G715 MC11 GPU உடன் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 (MediaTek Dimensity 9200) சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 512ஜிபி ஆப்ஷன் இந்தியாவில் வெளியாகவில்லை.
கேமராக்களை பொறுத்தவரை, இதன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் சோனி IMX890 சென்சார் மற்றும் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50-மெகாபிக்சல் மெயின் கேமரா + சோனி IMX581 சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 48-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + சோனி IMX709 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளன.,
செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனில் சோனி IMX709 RGBW சென்சார் மற்றும் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் கேமரா ஒன்று உள்ளது. இது ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில் அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் தப்பிலி அட்மோஸ் ஆதரவு உடனான டூயல் ஸ்பீக்கர்ஸும் உள்ளது
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7, ப்ளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட்சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 44W SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,300mAh பேட்டரிபேக் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 198 கிராம் எடையுடையது.
ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.94,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ரூ.8,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி (Exchange Offer) மற்றும் ரூ.12,000 வரையிலான கேஷ்பேக் சலுகைகள் (Cashback Offers) அறிவிக்கப்பட்டுள்ளது.
க்ரீம் கோல் (Cream Gold)ட், ஸ்லீக் பிளாக் (Sleak Balck) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போன் ஆனது, ஒப்போவின் ஆன்லைன் ஸ்டோர் (Oppo Online Store), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகள் வழியாக வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி மாலை 6 மணி முதல் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








