Home
Mobile

மோஸ்ட் வெர்சடைல் கவர் ஸ்கிரீன், ஹாசல்பிளாட் கேமரா உடன் ஒப்போ ஃபைன்ட் என்3 ஃபிளிப்

ஹாசல்பிளாட் கேமரா உடன் ஒப்போ ஃபைன்ட் என்3 ஃபிளிப்

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதுபோன்ற போன்கள் தான் தற்போது சலுகை விலையில் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் ஒப்போ நிறுவனம் ஒப்போ ஃபைன்ட் என்3 ஃபிளிப் (Oppo Find N3 Flip) எனும் போனை கொண்டுவர உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்போ ஃபைன்ட் என்2 ஃபிளிப் போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஒப்போ ஃபைன்ட் என்2 பிளிப் போன் ஆனது தரமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்தது. அதேசமயம் ஃபைன்ட் என்2 பிளிப் போன் தட்டையாக மடிக்கக்கூடியது ஆகும். எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இப்போது ஒப்போ ஃபைன்ட் என்2 பிளிப் போனை விட மேம்பட்ட அம்சங்களுடன் ஒப்போ ஃபைன்ட் என்3 ஃபிளிப் போன் விற்பனைக்கு வர இருக்கிறது. குறிப்பாக ஃப்ளெக்ஸ்யான் டிசைன் மற்றும் பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும். இதுதவிர பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்ட உலகின் முதன்மையான போன் என்ற பெருமையைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன். இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போன் இதுவாகும். கண்டிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஒப்போ ஃபைன்ட் என்3 ஃபிளிப் போன் வெளியீடு குறித்த சில ஆரம்ப விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போனை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மோஸ்ட் வெர்சடைல் கவர் ஸ்கிரீன்

உங்களது ட்விட்டரில் (எக்ஸ்) பிரவுசிங் செய்யவோ, யூடியூப் அல்லது ஸ்பாட்டிஃபையில் பாடல்களை தேர்ந்தெடுக்கவோ அல்லது ஃபீட் செய்யவோ நேரடியாக கவர் ஸ்கிரீனை பயன்படுத்த விரும்புகிறீர்களா? இந்த ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனானது, உங்களுக்கு பெரிய 3.26 இன்ச் வெர்டிகல் டிஸ்பிளேவை வழங்கும். இதுபோன்ற கவர் ஸ்கிரீன் மாடல்களில் இது மிகப்பெரியதாகும். அதோடு ஃபைண்ட் என்3 போனானது, உங்களுக்கு எட்ஜ் ஓவர் கொடுக்கும்.

இதன் மிகப் பெரிய கவர் டிஸ்பிளே பாரம்பரிய ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளேவை பிரதிபலிக்கும், விதமாக பிரைமரி டிஸ்பிளேவை மிரரிங் செய்கிறது. இது மிகவும் முக்கியமான பயன்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றை அடைய உதவுகிறது. இந்த வெர்டிகல் ஸ்கிரீனானது, பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஆப்களை ரன் செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த கவர் ஸ்கிரீனின் தனித்துவமான நோக்குநிலையானது, மற்ற ஃபிளிப் ஃபோன்களில் கவர் ஸ்கிரீன்களை பாதிக்கும் சிக்கல்களை நீக்கக்கூடிய வகையில் இருக்கிறது.

உதாரணமாக, ஓப்போ ஃபைண்ட என்3 ஃபிளிப் போனின் கவர் ஸ்கிரீனானது, ஜிமெயில், அவுட்லுக், ஊபர், கூகுள் மேப்ஸ் மற்றும் யூடியூப் மியூசிக் உள்பட 40க்கும் மேற்பட்ட முதன்மை வாய்ந்த ஆப்களை பயன்படுத்துவதை ஆதரிக்கிறது. இதிலேயே இமெயில்களுக்கு ரிப்ளை செய்யலாம், கேப் புக் செய்யலாம், நேவிகேஷனை பயன்படுத்தலாம் மற்றும் மியூசிக் ஸ்விட்ச் செய்யலாம். இது எவ்வளவு கூலானது? எந்தவொரு எக்ஸ்ட்ரா எபோர்ட்டும் போடாமல், பக்கமாக ஆப்களை பயன்படுத்தலாம்.

இந்த கவர் ஸ்கிரீன் 3x4 கிரிட் அளவில் ஆப்களை காண்பிக்கும் வகையில், பெரியதாக இருக்கிறது. இதில் 20 ஸ்டைல்களை கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம் மற்றும் குயிக்-அக்சஸ் விட்ஜெட் உள்ளது. மேலும், ஃபுல் கியூவர்டி கீபோர்ட்டில் டைப் செய்ய அனுமதிக்கிறது. இது, மிகவும் சிக்கலாக இருந்தால், நீங்கள் ஒன்-டச் ரிப்ளேக்களை அனுப்பலாம் அல்லது வாய்ஸை ஸ்பீச்-டூ-டெக்ஸ்ட் செய்யலாம். தனிப்பட்ட முறையில், இந்த வசதிக்காக இந்த ஸ்மார்ட்போனைப் பெறுவதற்கு யாராலும் காத்திருக்க முடியாது.

இந்த கவர் ஸ்கிரீன் 17:9 அஸ்பெக்ட் ரேசியோ கொண்டுள்ளது. இது 0.3 மிமீ அளவுள்ள சூப்பர்-தின் பெசல் மெசரிங் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மேம்பட்ட தகவல் தெரிவுநிலையை செயல்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, எக்ஸ் (ட்விட்டர்) ஆப்பில் வரும் கடினமான ஸ்க்ரோலிங் இல்லாமல் அதிக ட்வீட்களைப் படிக்க இது உங்களை அனுமதிக்கிறது.

உயரமான கவர் டிஸ்பிளே, செல்பீக்களை ஃப்ரேம் செய்வதை எளிதாக்குகிறது மற்றும் போட்டோ எடுப்பதற்கு முன்பாக ஒவ்வொரு டீடெய்லும் பிக்சரில் இருப்பதை உறுதி செய்கிறது. நமது டிஜிட்டல் பெட்களை எப்படி மறக்க முடியும்? ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனில் யூசர்களுக்கும் அவர்களின் சூழலுக்கும் ஏற்ப அனிமேஷன் ஆக்சன்கள் நிறைந்த எட்டு டிஜிட்டல் பெட்களை தேர்வு செய்யலாம்.

பாக்கெட்டபிள் டிசைன்

ஃபோல்டபிள் ஃபோன்களின் பாக்கெட்டபிலிட்டி, குறைந்த பாக்கெட் இடத்துடன் போராடும் பல பயனர்களிடையே அவற்றை பிரபலமாக்குகிறது. இருப்பினும், இது எல்லா ஃபிளிப் போன்களுக்கும் பொருந்தாது. மடிக்கும்போது, ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் வெறும் 85.54 மிமீ அளவை மட்டுமே கொண்டுள்ளது. இது வழக்கமான ஸ்மார்ட்போனின் பாதி அளவாகும். இதன் ரிசல்ட், இது எந்த பாக்கெட் அல்லது பர்ஸ்களிலும் வசதியாக பொருந்தக்கூடியதாகும். இதன் எடை வெறும் 198 கிராம் மட்டுமே, திறந்திருக்கும் போது வெறும் 7.79 மிமீ ஸ்லிம்மாக இருக்கும்.

இந்த ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனாது, ஸ்டைல் மற்றும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கிறது. ரியர் சர்பேஸ் 75 டிகிரி சூப்பர்-ஆர்க் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 மூலம் பாதுகாக்கப்படுகிறது. அங்கு ஒரு டயமண்ட் ஹைலைட் பிளேடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஷார்ப் எட்ஜ் கொண்ட மிடில் பிரேம் உடன் பாட்டம் பகுதி மெலிதாகவும் நேராகவும் தோன்ற உதவுகிறது.

இதன் இன்னர் ஸ்கிரீனானது, 6.8 இன்ச் அளவையும் 120Hz ரெப்ஃரெஷ் ரேட்டையும், 403 பிபிஐ பிக்சல் டென்சிட்டியை டியுவி ரெய்ன்லேண்ட் இன்லிஜெண்ட் ஐ கேர் சர்டிபிகேஷனுடன் வழங்குகிறது. அதோடு ஐ கம்ஃபோர்ட் டோன் டெக்னாஜி கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் உபயோகித்தாலும், யூசர்களின் ஐ கம்போர்ட்டை உறுதிசெய்வதற்காக சுற்றுப்புற ஒளி கணிப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இது செயல்படுகிறது.

பல்வேறு மடிக்கக்கூடிய ஃபோன் தயாரிப்பாளர்கள் தீர்க்கத் தவறிய ஒரு சிக்கலான, குறைந்த இன்னர் ஸ்கிரீன் மடிப்பை கொடுக்க, ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனின் டிஸ்பிளேவின் கீழ் காப்புரிமை பெற்ற ஸ்டெயின்லெஸ்-ஸ்டீல் மெஷ் மேட்ரிக்ஸ் இதில் பயன்படுத்தப்படுகிறது. இது டிஸ்பிளேவுக்கு கட்டமைப்பு ஆதரவை வழங்குவதன் மூலம் செயல்படுகிறது. இதனால் கண்களுக்கு தெரியும் மடிப்பு குறைவாக இருக்கிறது.

முதல் முறையாக, ஃபைண்ட் என்3 ஃபிளிப்பில் அலர்ட் ஸ்லைடர் வருகிறது. சிறிய விஷயங்களுக்காக டிஸ்பிளேவை திறப்பதைக் குறைக்க இது, மற்றொரு வழியாகும். டிவைஸின் இடது விளிம்பில் உள்ள இந்த மெக்கானிக்கல் கன்ட்ரோலைப் பயன்படுத்தி, ஃபைண்ட் என்3 ஃபிலிப்பை திறக்காமலே பயனர்கள் சைலண்ட், வைப்ரேட் மற்றும் ரிங் ஆகிய மூன்று ஸ்விட்ச் மோட்களை மாற்றலாம்.

ஃபைண்ட் என்2 ஃபிளிப் உடன் ஒப்பிடும்போது, இது கீழும் உறுதியாக இருக்கிறது. அதில் சிங்கிள் ஃபிரிக்ஷன் பிளேட் பிரிடிசிசர் பயன்படுத்தப்படிருந்த நிலையில், ஃபைண்ட் என்3 ஃபிளிப்பில் டூயல் ஃபிரிக்ஷன் பிளேட் ஸ்ட்ரக்ச்சர் அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது. இது எந்த கோணத்தில் இருந்தும் போனை ஓப்பன் செய்யும்போதும், யூசர்களுக்கு ஃபிளிக்ஃபார்ம் ஸ்டெபிலிடியை கொடுக்கிறது.

முந்தைய ஜெனரேஷனை போலவே, மைக்ரோ கர்வ்ட் ப்ளோவிங் ஸ்ட்ரக்ச்சர் கொடுக்கப்பட்டுள்ளது. இது 12,000 முறை கர்விங் சர்பேஸை 3 நிமிடங்களில் செய்ய உதவுகிறது. இதுவொரு வாட்டர் வேவ்ஸ் போன்ற டசலிங் எஃபெக்ட்டை கொடுக்கிறது.

ஃபைண்ட் N2 ஃபிலிப்புடன் ஒப்பிடுகையில், இந்த மாடலில் ஆயுள் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும், டிபர்மேஷன் ரெசிஸ்டன்ஸை 25 சதவீதம் அதிகரிக்கவும், சுமைகளை தாங்கும் விதமாக விமான-தரம், உயர்-வலிவு எஃகு பயன்படுத்துகிறது.

ஃபிளிப் போனில் முதல் முறையாக ட்ரிபிள் கேமரா
ஃபிளிப் ஃபார்ம் காரணியை வைத்து நமக்கு சில வெளிப்படையான நன்மைகளும் கிடைக்கின்றன. இவை போல்டபில் டிஸ்பிளே அல்லது சிறிய அளவைக் கொண்டிருப்பதைத் தாண்டி இன்னும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. குறிப்பாக, புகைப்படங்களை இதுவரை எடுத்து பார்த்திராத சில கோணங்களில் படம்பிடிக்க ஃபிலிப் மாடல் பெரியளவில் உதவுகிறது. ஃபைண்ட் என்3 ஃபிளிப் இல் உள்ள ஃபிளாக்ஷிப் டிரிபிள் கேமரா ஸ்டேக்குடன் பிரமாண்டமான புகைப்படங்களை நீங்கள் படம்பிடிக்க முடியும்.

தொழில்துறையில் முதலில், ஃபைன்ட் என்3 ஃபிளிப் பிரதான கேமராவின் ஒரு பகுதியாக மூன்று சக்திவாய்ந்த கேமராக்களை இணைத்துள்ளது, இது புகழ்பெற்ற கேமரா தயாரிப்பாளரான ஹாசல்பிளாடுடன் இணைந்து டியூன் செய்யப்பட்டது, இது கவர் திரைக்கு அருகில் வட்ட வடிவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் டிரிபிள் கேமரா ஸ்டேக்கில் ஒரு பெரிய 50 மெகாபிக்ஸல் சோனி IMX890 வைட்-ஆங்கிள் ப்ரைமரி கேமரா உள்ளது. இத்துடன், 2X ஆப்டிகல் ஜூம் கொண்ட 32MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50மிமீக்கு அருகில் உள்ள போர்ட்ரெய்ட்-பெர்ஃபெக்ட் ஃபோகல் நீளத்தை வழங்கும் ஒரே ஃபிளிப் போன் இதுவாகும். இதில் உள்ள 48 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் கேமரா 114 டிகிரி வியூவை கொண்டுள்ளது. இது ஆட்டோஃபோகஸுடன் வருகிறது. இது 4cm வரை உள்ள பாடங்களின் மேக்ரோ புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது.

இந்த போனின் கேமரா ஹார்டுவேர் சிறந்த முறையில் செதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்போ ஹசல்பால்ட் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் கேமராக்கள் புகழ்பெற்ற ஹசல்பால்ட் நேச்சுரல் கலர் சொலுஷன் (Hasselblad Natural Color Solution) அம்சத்தை வழங்குகின்றன. இது ஒரு தனித்துவமான வண்ண-செயலாக்க அமைப்பாகும். நீங்கள் ஷட்டர் பட்டனை பிரஸ் செய்தால், இது கலர் அக்யுரசி, டோன் மற்றும் காண்ட்றாஸ்ட் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இது நிலையான மற்றும் துல்லியமான முடிவுகளை வழங்குகிறது.

ஹசல்பால்ட் (Hasselblad) தொழில்நுட்பமானது போர்ட்ரெய்ட் ஷாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பொக்கே விளைவுகள் ஒரு பெரிய கேமராவின் உள்ளீடுகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே போர்ட்ரெய்ட் புகைப்படங்கள் XCD65mm Hasselblad லென்ஸுடன் படமாக்கப்பட்டது போல் இருக்கும். இந்த கேமராவின் மற்றொரு சிறப்பு, இந்த பிராண்டின் தனித்துவமான ரெட்ரோ பாணியில் புகைப்படங்களைப் பிடிக்க 65:24 உயர் விகிதத்தைப் பயன்படுத்தும் XPAN மோடை பயன்படுத்துகிறது.

இந்த கேமராவின் ஹசல்பால்ட் படம் எடுக்கும் அனுபவத்தை மீண்டும் உருவாக்க கஸ்டமைஸ் செய்யப்பட்ட UI, ஷட்டர் சவுண்ட் மற்றும் வாட்டர்மார்க் உள்ளது. எமரால்டு, ரேடியன்ஸ் மற்றும் செரினிட்டி ஆகிய மூன்று கூடுதல் பில்டர்களை கொண்டு பயனர்கள் மேலும் அழகான புகைப்படங்களை எடுக்கலாம்.

ஹாசல்பிளாட் கேமரா உடன் ஒப்போ ஃபைன்ட் என்3 ஃபிளிப்

உங்கள் பாக்கெட்டில் கட்சிதமாக பொருந்தும் ஒரு சிற்பம் தான் இந்த போன்

ஒப்போ பைண்ட் என்3 ஃபிளிப் (OPPO Find N3 Flip) மக்களை ஈர்க்கும் ஒரு அற்புதமான ஃபிளிப் ஃபோன்களில் ஒன்றாக மாறியுள்ளது. இன்னும் இதன் அறிமுகத்திற்காக நம்மால் காத்திருக்க முடியாத அளவுக்கு இது நம்மை ஈர்த்துள்ளது என்பதே உண்மையாகும். இது பாக்கெட்டில் பொருத்தமாக பொருந்துகிறது என்பதை தாண்டி, ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் அதன் செயல்பாட்டு திறனுடன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இதன் ஃபன்க்ஷனல் டிஸ்பிளே ஸ்க்ரீன் அடிப்படையில் பிரதான திரையைப் போலவே உள்ளது. இதன் ஹின்ஞ் டிசைன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போனை மடிப்பது மிகவும் சுலபமாக்கியுள்ளது. ஆனால் மிக முக்கியமாக, Oppo Find N3 Flip போன் ஆனது Oppo Find X தொடர் பிளாக்ஷிப் போன்றே உள்ளது. ஹசல்பால்டு உடன் இணைந்து டியூன் செய்யப்பட்ட டிரிபிள் கேமரா ஸ்டாக் மூலம், ஒப்போ பைண்ட் என்3 ஃபிலிப் ஆனது சிறந்த பிரபஷனல் புகைப்படங்களை மற்றும் போர்ட்ரைட் படங்களை எடுக்கும் சிறந்த ஃபிலிப் போன் மாடலாக திகழ்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அட்டகாசமான சாதனத்தின் முழு விபரம், விலை மற்றும் விற்பனை விவரங்கள் பற்றிய கூடுதல் அறிவிப்புகளை விரைவில் வெளியிடுகிறோம். அதுவரை சாற்று காத்திருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find N3 Flip Incoming with the Most Versatile Cover Display, Hasselblad Cameras and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X