Home
Mobile

50+48+34MP கேமரா.. 16ஜிபி ரேம்.. சூப்பர்வூக் சார்ஜிங்.. மிரட்டும் ஒப்போ போன்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் மற்றும் ஒப்போ வாட்ஸ் 4 சாதனங்களை வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.. குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களும் முதலில் சீனாவில் அறிமுகமாகும். அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ வாட்ச் 4 ப்ரோ (OPPO Watch 4 Pro) மாடல் ஆனது துடிப்பு சென்சார், இரத்த ஆக்ஸிஜன் சென்சார், இசிஜி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்கும். குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் எல்டிஒபி டிஸ்பிளே ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச். மேலும் துருப்பிடிக்காத ஸ்டீல் கேஸ் மற்றும் செராமிக் பேக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் இந்த ஒப்போ வாட்ச் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

16ஜிபி ரேம்.. சூப்பர்வூக் சார்ஜிங்.. மிரட்டும் ஒப்போ போன்.. எந்த மாடல்

ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் அம்சங்கள் (OPPO Find N3 Flip specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (FHD+ AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். பின்பு இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வெளிப்புறம் 3.26-இன்ச் அமோலெட் டிஸ்பிளேவும் உள்ளது. குறிப்பாக போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 4என்எம் பிராசஸர் (Octa Core Dimensity 9200 4nm processor) வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கலர்ஒஎஸ் 13 (ColorOS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஒப்போ போன் அறிமுகமாகும்.

ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் 50எம்பி பிரைமரி கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 32எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-ஆடியோ (USB Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாமான ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன்.

16ஜிபி ரேம்.. சூப்பர்வூக் சார்ஜிங்.. மிரட்டும் ஒப்போ போன்.. எந்த மாடல்

67 வாட்ஸ் சூப்பர்வூக் பிளாஷ் சார்ஜ் (67W SUPERVOOC Flash Charge) கொண்ட 4300 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த ஒப்போ போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, என்எஸ்ஏ, வைஃபை 7, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் போன். குறிப்பாக ஒப்போ ஃபைன்ட் என்3 பிளிப் மற்றும் ஒப்போ வாட்ச் 4 ப்ரோ சாதனங்கள் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find N3 Flip and OPPO Watch 4 Pro will be launched on August 29: check specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X