Home
Mobile

சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக புதிய பிளிப் போனை இந்தியாவில் இறக்கிவிடும் Oppo.! அறிமுகம் எப்போது?

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஒப்போ நிறுவனம் ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான டிஸ்பிளே, தரமான சிப்செட் மற்றும் அட்டகாசமான கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய பிளிப் போனை இந்தியாவில் இறக்கிவிடும் ஒப்போ.! அறிமுகம் எப்போது?

தரமான டிஸ்பிளே

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடலில் 6.8-இன்ச் AMOLED ஃபோல்டிங் டிஸ்ப்ளே வசதி உள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ போன். பின்பு இந்த போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 3.26 இன்ச் அளவில் கவர் டிஸ்ப்ளே வசதி கூட உள்ளது. குறிப்பாக சாம்சங் பிளிப் போனை விட இந்த ஒப்போ பிளிப் போன் ஒரு தனித்துவமான அம்சங்களை வழங்கும்.

அதிநவீன லிக்விட் கூலிங் சிஸ்டம், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போன். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும் இந்த ஒப்போ பிளிப் போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய பிளிப் போனை இந்தியாவில் இறக்கிவிடும் ஒப்போ.! அறிமுகம் எப்போது?

மீடியாடெக் சிப்செட்

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. பின்பு சக்திவாய்ந்த மீடியாடெக் Dimensity 9000+ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்தஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்டுத்த முடியும். பின்பு மேம்பட்ட வேகம் மற்றும் சிறந்த செயல்திறன் வழங்கும் Dimensity 9000+ சிப்செட்.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் எடை 191 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பின்பு பிளாக் மற்றும் பர்பில் நிறங்களில் இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன.

4300 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போன். பின்பு இதை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. ஆனால் இந்த பேட்டரிக்கு பதிலாக 5500 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

இந்த போனின் வெளிப்புற டிஸ்பிளேவின் அருகில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் காணப்படுகிறது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல் ஆனது 32எம்பி செல்பி கேமராவுடன் வெளிவரும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ள இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.

புதிய பிளிப் போனை இந்தியாவில் இறக்கிவிடும் ஒப்போ.! அறிமுகம் எப்போது?

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் விலை

5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல். அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Find N2 Flip will be launched in India at the end of February: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X