ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போனின் அறிமுக தேதி வெளியானது.! என்னென்ன அம்சங்கள்?
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போன் சர்வதேசச் சந்தையில் வரும் பிப்ரவரி 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால் இந்த போன் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளது. அதேபோல் ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போனின் எடை 191 கிராம் ஆகும். மேலும் இப்போது ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் அம்சங்கள்
ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடலில் 6.8-இன்ச் AMOLED ஃபோல்டிங் டிஸ்ப்ளே வசதி உள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ போன். பின்பு இந்த போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 3.26 இன்ச் அளவில் கவர் டிஸ்ப்ளே வசதி கூட உள்ளது.
லிக்விட் கூலிங் சிஸ்டம், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போன். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும் இந்த ஒப்போ பிளிப் போன். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்
என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. பின்பு சக்திவாய்ந்த மீடியாடெக் Dimensity 9000+ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல். பின்பு மேம்பட்ட வேகம் மற்றும் சிறந்த செயல்திறன் வழங்கும் Dimensity 9000+ சிப்செட்.
பாஸ்ட் சார்ஜிங் வசதி
4300 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போன். பின்பு இதை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. ஆனால் இந்த பேட்டரிக்கு பதிலாக 5500 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டால் இன்னும் அருமையாக இருக்கும். பின்பு பிளாக் மற்றும் பர்பில் நிறங்களில் இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போனின் வெளிப்புற டிஸ்பிளேவின் அருகில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் காணப்படுகிறது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல் ஆனது 32எம்பி செல்பி கேமராவுடன் வெளிவரும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ள இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போனின் விலை
5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல். அதேபோல் சாம்சங் பிளிப் போனை விட சற்று குறைவான விலையில் இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போன் அறிமுகமாகும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியச் சந்தையில் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால். போட்டிப்போட்டுக் கொண்டு பல செல்போன் நிறுவனங்கள் 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications