ரூ.1000 கொடுத்த போதுமா? Oppo Find N2 Flip போனை வாங்கிடலாமா? Flipkart-ல் விற்பனையாகும் பாஸ்!
Oppo, சில வாரங்களுக்கு முன்பு, உலகளாவிய சந்தையில் Oppo Find N2 Flip ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்து அறிவித்தது. இது மடக்கக்கூடிய போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனமாகும். இப்போது இதன் விற்பனைக்கு முன்பாக லிமிடெட் எடிஷன் பாஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒப்போ நிறுவனம் அதன் Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனின் இந்திய விலையை மார்ச் 13 அன்று வெளியிடும் என்று அறிவித்துள்ளது. Oppo இன் முதல் கிளாம்ஷெல் (clamshell) போல்டபில் சாதனமான இந்த ஸ்மார்ட்போன், இந்திய சந்தையில் Flipkart வழியாகப் பிரத்தியேகமாக விற்கப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது, இந்த போனின் அறிமுகத்திற்கு முன்னதாக நிறுவனம் ஒரு சுவாரசியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒப்போ ஃபைண்ட் N2 ஃபிலிப் லிமிடெட் எடிஷன் பாஸ் என்றால் என்ன? இது என்ன செய்யும்?
இந்த போனின் விலை அறிவிப்புக்கு முன்னதாக, Oppo Find N2 Flip Limited Edition Pass என்ற பாஸை, ஒப்போ நிறுவனம் இப்போது பிளிப்கார்ட் இ-காமர்ஸ் போர்ட்டல் வழியாக விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த Oppo Find N2 Flip Limited Edition Pass விலை வெறும் ரூ.1000 மட்டுமே. இந்த பாஸ், ஒப்போ ஃபைண்ட் N2 ஃபிளிப்பை வாங்கும் போது பிரத்தியேக கூடுதல் சலுகைகளைப் பெற அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Oppo Find N2 Flip Limited Edition Pass மூலம் பயனர்கள் பெறக்கூடிய சலுகைகள் மற்றும் பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா? வாங்கப் பார்க்கலாம். Oppo Find N2 Flip Limited Edition Pass விலை ரூ.1000 என்பது உறுதியாகியுள்ளது. இது இப்போது Flipkart மூலம் வாங்குவதற்குக் கிடைக்கிறது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி பயனர்களுக்கு இது அல்டிமேட் சலுகையை வழங்குகிறது.

ரூ.1000 செலவு செய்து பாஸ் வாங்கினால் ரூ.5000 மேல் சலுகையா?
இந்த வங்கி பயனர்களின் பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்துவதற்குப் பயனர்கள் ரூ.5000 உடனடி தள்ளுபடியைப் பெறுவதற்கு இந்த ஒப்போ ஃபைண்ட் N2 ஃபிலிப் லிமிடெட் எடிஷன் பாஸ் அனுமதிக்கிறது. கூடுதலாக, Oppo Find N2 Flip வாங்குபவர்கள் ரூ. 5000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் தகுதியும் கிடைக்கிறது. இந்த பலன்களைப் பெற, Oppo Find N2 Flip விற்பனை தொடங்கியவுடன் பயனர்கள் போனை வாங்க வேண்டும்.
இந்த சாதனத்தை வாங்கும் போது பாஸின் பலன்கள் தானாகவே பயன்படுத்தப்படும். Oppo Find N2 Flip விற்பனை தேதியை Oppo இன்னும் வெளியிடவில்லை. பிராண்ட் விற்பனை தேதியை மார்ச் 13 அன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். Oppo Find N2 Flip போனின் சிறப்பம்சம் பற்றித் தெரியாதவர்கள் இந்த பதிவை இறுதி வரை படிக்கவும்.

Oppo Find N2 Flip சிறப்பம்சம்
Oppo Find N2 Flip, வெளிப்புறத்தில், 720 × 382 பிக்சல் தீர்மானம் கொண்ட, 250ppi பிக்சல் அடர்த்தி உடைய 60Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம், 900nits உச்ச பிரகாசம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 3.26' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் முக்கிய டிஸ்பிளேவானது 6.8' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவாகும்.
இது முழு HD+ ரெசல்யூஷன், 403ppi பிக்சல் அடர்த்தி, 120Hz புதுப்பிப்பு வீதம், 1600nits பீக் பிரைட்னஸ் மற்றும் UTG கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. Oppo Find N2 Flip ஆனது 50MP Sony IMX890 சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் (112° வைட் ஆங்கிள்) ஆகியவற்றை உள்ளடக்கிய டூயல் கேமரா அமைப்பை வழங்குகிறது. இந்த சாதனத்தில் உள்ள கேமராக்கள் Hasselblad மூலம் டியூன் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த Oppo Find N2 Flip சாதனத்தின் முன்பகுதியில், 32MP Sony IMX709 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 4300mAh பேட்டரி உடன் 44W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை இந்தியச் சந்தையில் சுமார் ரூ.79,999 என்ற விலையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனை வாங்க உங்களுக்கு பாஸ் வேண்டுமா? வேண்டாமா? மற்றும் இந்த பாஸ் ஐடியா இந்தியாவில் வொர்க் அவுட் ஆகுமா என்று கமெண்ட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








