ஆசையை தூண்டும் ஆஃபர் விலை.. அறிமுகமானது Oppo Find N2 Flip போன்.. மார்ச் 17 முதல் விற்பனை!
சாம்சங் நிறுவனத்தின் ஃபிளிப் போன்களுக்கு போட்டியாக ஒப்போவின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான (Foldable Smartphone) ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வருகிற மார்ச் 17 முதல் "ஆசையை தூண்டும்" ஆஃபர் விலையின் கீழ் விற்பனை செய்யப்படவுள்ளது!
ஒரே ஒரு ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனின் அசல் இந்திய விலை நிர்ணயம் என்ன? இதன் ஆஃபர் விலை என்ன? ஒப்போவின் இந்த லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்:

Oppo Find N2 Flip விலை, கலர் ஆப்ஷன்ஸ் மற்றும் விற்பனை
ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் இந்திய விலை ரூ.89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அஸ்ட்ரல் பிளாக் மற்றும் மூன்லிட் பர்பிள் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் பிளிப்கார்ட், ஒப்போ ஸ்டோர்ஸ் மற்றும் மெயின்லைன் ரீடெய்ல் சேனல்கள் வழியாக மார்ச் 17 முதல் விற்பனை செய்யப்படும்.
Oppo Find N2 Flip மீது கிடைக்கும் சலுகைகள்
ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனின் மீது 2 முக்கியமான சலுகைகள் கிடைக்கிறது. முதலாவதாக - எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் (Exchange Offer). இதன் கீழ் உங்களுக்கு ரூ.5,000 எக்ஸ்சேன்ஜ் போனஸ் கிடைக்கும். இதற்காக நீங்கள் உங்களுடைய பழைய ஒப்போ ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.
இரண்டாவதாக - பேங்க் ஆஃபர் (Bank Offer). எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோடக், ஐடிஎப்சி பர்ஸ்ட், எச்டிபி பைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு வழியாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.5,000 கேஷ்பேக் கிடைக்கும். மேற்கண்ட 2 சலுகைகளையும் பயன்படுத்தினால் இந்த ஒப்போ போனை ரூ.89,999 க்கு பதிலாக ரூ,79,999 க்கு வாங்க முடியும்.
ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனின் டிஸ்பிளே
இந்த ஃபிளிப் போனில் 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.8-இன்ச் ஃபுல் எச்டி+ அமோஎல்இடி மெயின் டிஸ்ப்ளே (Main Display) உள்ளது. மேலும் இதில் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 250பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 3.62-இன்ச் கவர் டிஸ்பிளேவும் (Cover Display) உள்ளது.
ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனின் ஓஎஸ் மற்றும் ப்ராசஸர்
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த கலர்ஓஎஸ் 13.0 உடன் வருகிறது. மேலும் இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 பிளஸ் 5ஜி சிப்செட்டை பேக் செய்கிறது மற்றும் ஆர்ம் மாலி-ஜி710 எம்சி10 ஜிபியு, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனின் கேமராக்கள்
இது 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்890 மெயின் கேமரா (எப்/1.8) + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சோனி ஐஎம்எக்ஸ்355 கேமரா (எப்/2.2) என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடனே வருகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை 32 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ709 ஆர்ஜிபிடபுள்யூ செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனின் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்
4,300mAh டூயல்-செல் பேட்டரியுடன் வரும் இந்த ஒப்போ போனில் இது 44W சூப்பர்வூக் சார்ஜிங்கிற்கான ஆதரவு உள்ளது. ஆனால் இந்த போனுடன் 80W சார்ஜர் அனுப்பப்படும் என்று ஒப்போ கூறுகிறது. கடைசியாக, இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) உள்ளது; கூடவே இது ஃபேஸ் அன்லாக்கையும் (Face Unlock) ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications








