Home
Mobile

ஆஃபர் விலையில் OPPO ஃபிளிப் போன் விற்பனை.. நம்பி வாங்க 4 காரணங்கள்.. தவிர்க்க 3 காரணங்கள்!

ஒப்போவின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் போனான ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப்பின் (Oppo Find N2 Flip) இந்திய விற்பனை ஆரம்பமானது. இந்த போனின் அசல் விலை என்ன? ஆஃபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? நம்பி வாங்கலாமா, வேண்டாமா? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் (Samsung Galaxy Z Flip) சீரீஸ் மற்றும் மோட்டோ ரேஸர் (Moto Razr) போன்ற ஃபிளிப் போன்களுக்கு "வேட்டு வைக்கும்" நோக்கத்தில் அறிமுகமாகியுள்ள ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனானது 8ஜிபி + 256ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜின் கீழ் மட்டுமே வெளியாகியுள்ளது.

ஆஃபர் விலையில் OPPO ஃபிளிப் போன் விற்பனை!

அசல் விலை மற்றும் ஆஃபர் விலை: ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப்பின் அசல் விலை ரூ.89,999. இருப்பினும் நீங்கள் எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ மற்றும் கோடக் பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.5,000 வரையிலான கேஷ்பேக் கிடைக்கும்; கூடவே ரூ.5,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் + லாயல்டி போனஸை பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போனானது ஒப்போ பிராண்டட் ஸ்மார்ட்போனாக இல்லையென்றால் உங்களுக்கு அதிகபட்சமாக ரூ.2000 என்கிற தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். இதுதவிர்த்து ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் மீது குறுகிய கால மற்றும் நீண்ட கால இஎம்ஐ விருப்பங்களும் கூட அணுக கிடைக்கும்.

டிஸ்பிளே: கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் உடன் வரும் ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8-இன்ச் AMOLED மெயின் டிஸ்பிளேவும் (Main Display), 3.26-இன்ச் அளவிலான OLED கவர் டிஸ்பிளேவும் (Cover Display) உள்ளது.

ப்ராசஸர் மற்றும் ஓஎஸ்: இது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 பிளஸ் (MediaTek Dimensity 9000+ SoC) ப்ராசஸர் உடன் வருகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 12 கொண்டு இயங்குகிறது.

கேமராக்கள்: இமேஜிங்கை பொறுத்தவரை, இது ஹசல்பிளாட் (Hasselblad) பிராண்டிங்கின் கீழ் வடிவமைக்கப்பட்ட டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50MP சோனி IMX890 மெயின் கேமரா + 112-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ உடனான 8MP சோனி IMX355 அல்ட்ராவைட் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்: இது 44W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4300mAh பேட்டரியை கொண்டுள்ளது. மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது. கூடவே ஃபேஸ் அன்லாக் (Face unlock) அம்சத்துடனும் வருகிறது.

நம்பி வாங்க 4 காரணங்கள்: இது மிகவும் திடமான அதே சமயம் மிகவும் நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ளது; இதன் கவர் டிஸ்பிளேவானது மிகவும் பிராக்ட்டிக்கலாக (Practical) உள்ளது; இதன் மெயின் கேமரா மிகவும் சிறப்பாக உள்ளது; கடைசியாக இது 44W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது!

வாங்காமல் தவிர்க்க 3 காரணங்கள்: ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப்பில் சில குறைகளும் உள்ளன. இதன் கலர்ஓஎஸ்-இல் இன்னும் கொஞ்சம் "சுத்திகரிப்பு: தேவை. ஏனென்றால் ப்ளோட்வேர்களை காணமுடிகிறது; அடுத்ததாக இதில் ஐபி ரேட்டிங் இல்லை; கடைசியாக இதில் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவும் இல்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find N2 Flip India Sale Started 4 Reasons To Buy Without Any Hesitation 3 Reasons to Avoid
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X