டூயல் கேமரா-வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிலே கொண்ட ஒப்போ எப்9 துவக்க விற்பனை.! விலை என்ன தெரியுமா?
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ நிறுவனம் அண்மையில் தனது ஒப்போ எப்9 ப்ரோ வின் விற்பனையை இந்திய சந்தையில் துவங்கியது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ நிறுவனம் அண்மையில் தனது ஒப்போ எப்9 ப்ரோ வின் விற்பனையை இந்திய சந்தையில் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஒப்போவின் அடுத்த புதிய மாடலான ஒப்போ எப்9 ஸ்மார்ட் போன் இன் அதிகாரப்பூர்வ விற்பனை தேதி அறிவிப்பை இன்று அறிவித்திருக்கிறது.
புதிய ஒப்போ எப்9 ஸ்மார்ட் போன் டைமென்ட் பின் பட்டர்ன் பேணல் உடன் ஒப்போ எப்9 தோற்றத்திலேயே விற்பனைக்கு வருகிறது. ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட் போன் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தலத்தில் ரூ.23,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை தேதி
ஒப்போ எப்9 ஸ்மார்ட் போன் மிஸ்ட் பிளாக் மற்றும் ஸ்டெல்லர் பர்பிள் நிறத்தில் இந்திய சந்தையில் களமிறங்குகிறது. ஒப்போ நிறுவனம் இந்திய வாடிக்கையாளருக்கு ஒப்போ எப்9 இன் விற்பனை தேதியை நாளை என்று அறிவித்திருக்கிறது. அதாவது செப்டம்பர் 15 முதல் ஒப்போ எப்9 இன் விற்பனை துவங்குமென்று அறிவித்திருக்கிறது.

ஒப்போ எப்9 ஸ்மார்ட் போன்
நாள் முதல் ஒப்போ எப்9 ஸ்மார்ட் போன் பிளிப்கார்ட் இல் வெறும் ரூ.19,990க்கு கிடைக்குமென்று ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போன் சாம்சங் கேலக்ஸி ஜே8 மற்றும் ஹானர் பிளே ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாய் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ எப்9 விபரக்குறிப்பு:
- 6.3 இன்ச் எச்டி பிளஸ் 1080x2280 பிக்சல் ரெசொலூஷன் உடன் கூடிய 19.5:9 விகித வாட்டர் ட்ரோப் நாட்ச் டிஸ்பிலே
தொடுதிரை
- ஆக்டா கோர் மீடியா டெக் ஹெலியோ பி60 சிப்செட்
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256ஜிபி விரிவாக்க சேமிப்பு
- 16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் செகண்டரி சென்சார் கொண்ட டூயல் கேமரா
- 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- விஓசிசி பாஸ்ட் சார்ஜிங்
- 3,500 எம்.ஏ.எச் பேட்டரி
- 4ஜி வோல்ட்
- வைப்பை 802.11
- ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- ஜிபிஎஸ்
போன்ற அனைத்து வசதிகளும் ஒப்போ எப்9 இல் இருக்கிறது.

பிரத்தியேக விற்பனை துவக்கம்
ஒப்போ எப்9, செப்டம்பர் 15 முதல் தனது பிரத்தியேக விற்பனையை பிளிப்கார்ட் மற்றும் அனைத்து ஆஃப்லைன் கடைகளில் துவங்குகிறது. துவக்க விற்பனையை முன்னிட்டு பல சலுகைகளுடன் ஒப்போ எப்9 ஸ்மார்ட் போன் மிஸ்ட் பிளாக் மற்றும் ஸ்டெல்லர் பர்பிள் நிறத்தில் வெறும் ரூ,19,990 விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications