Home
Mobile

ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிப்பு.!

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் போனின் பேட்டரி ஆயுள் மிக முக்கியமானது என்று தான் கூறுவார்கள், அதற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.

ஒப்போ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஒப்போ எ9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிப்பு.!

ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலின் உண்மை விலை ரூ.23,990-ஆக இருந்தது, தற்சயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை பாரப்போம்.

தரமான டிஸ்பிளே:

தரமான டிஸ்பிளே:

ஒரு ஸ்மார்ட்போனில் முதலீடு செய்யும் போது பயனர்கள் சரிபார்த்து, மதிப்பீடு செய்வது,முதல் டிஸ்பிளே காட்சி ஒன்றாகும், அந்த வகையில் சிறந்த டிஸ்பிளே அம்சத்துடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. 4ஜி இனடர்நெட் இணைப்பு வசதியைக் கொணடுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இக்கருவி 90.8 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ
வசதியைக் கொண்டுள்ளது, எனவே சிறந்த திரை அனுபவம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. ஐபோனுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

நிறங்கள் மற்றும் வடிவமைப்பு

நிறங்கள் மற்றும் வடிவமைப்பு

ஊதா, சன்ரைஸ் ரெட், மற்றும் ட்விலைட் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த அட்டகாசமான ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நவீனதொழில்நுட்ப அம்சங்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட சற்று வித்தியசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஒப்போ ஸ்மார்ட்போனுக்கு இருக்கும் அதே ஸ்டைலில் களமிறங்கியுள்ளது இந்த அட்டகாசமான எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஐபோனை விட சிறந்த வடிவமைப்புடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

பேட்டரி ஆயுள்

பேட்டரி ஆயுள்

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் போனின் பேட்டரி ஆயுள் மிக முக்கியமானது என்று தான் கூறுவார்கள், அதற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது. மேலும் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் டெக்னாலஜி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் சார்ஜ் பற்றிய
கவலை சுத்தமாக கிடையாது என்று தான் கூறவேண்டும், இது குறைந்த மின்னழுத்த-வேக சார்ஜிங் பொறிமுறையை பயன்படுத்துவதன் மூலம் உடனடி பேட்டரி சார்ஜ் சுழற்சிகளை உறுதிப்படுத்துகிறது. இந்த புரட்சிகர வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்துடன், வழக்கமான 5V / 1A சார்ஜிங் முறைகள் விட உங்கள் OPPO F9 Pro 4 முறை வேகமாக வசூலிக்க முடியும். அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் பயனர்கள் சந்திக்கும் பேட்டரி சிக்கல்களைத் தீர்க்கிறது ஒப்போ எப்9 ப்ரோ .

கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக 25எம்பி செல்பீ கேமரா மற்றும் f/2.0 யிநசவரசந போன்ற வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும்
பல்வேறு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். டிஸ்எல்ஆர் கேமராவை விட சிறந்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா. அதன்பின்பு 12எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். அதன்படி துல்லியமான புகைப்படங்களை எடுக்க இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மிகவும் உதவியாய் இருக்கும். பல்வேறு விருப்பங்களை கொண்டு எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் டூயல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

 6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இணையம் மற்றும் வீடியோ கேம் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கலர் ஒஎஸ் 5.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, எனவே விற்பனையில் அதிக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறுது.

பயனர்களுக்கு தகுந்தபடி வெளிவந்துள்ளது.

பயனர்களுக்கு தகுந்தபடி வெளிவந்துள்ளது.

ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனில் சிறந்த கேமரா அனுபவம், மேம்பட்ட வடிவமைப்பு, பின்பு மல்டிமீடியா நுகர்வு மற்றும் இசைவான மென்பொருள் அனுபவத்தை கொண்டுள்ளது. குறிப்பாக பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F9 Pro price slashed again by Rs 2000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X