Home
Mobile

வியக்கவைக்கும் விலையில் களமிறங்கிய அசத்தலான ஒப்போ எப்9 ப்ரோ.!

ஒரு ஸ்மார்ட்போனில் முதலீடு செய்யும் போது பயனர்கள் சரிபார்த்து, மதிப்பீடு செய்வது,முதல் டிஸ்பிளே காட்சி ஒன்றாகும்.

By Prakash S

ஒப்போ நிறுவனம் சியோமி நிறுவனத்திற்கு போட்டியா தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி ஒப்போ நிறுவனம் வியக்கவைக்கும் விலையில் ஒப்போ எப்9 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இன்றைய தினத்தில் ஸ்மார்ட்போன் வாங்குவது எளிதான வேலை அல்ல. சந்தையில் பல்வேறு தொழில்நுட்பங்கள், விலை மட்டும் தரம் போன்றவற்றின் அடிப்படையில் தான் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும், குறிப்பாக கேமராக்களின் செயல்திறமைகளை பற்றி அறிந்துகொண்டு தான் சிலர் ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள். இதற்கு தகுந்தபடி சிறந்த செயல் திறமைகளுடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

வியக்கவைக்கும் விலையில் களமிறங்கிய அசத்தலான ஒப்போ எப்9 ப்ரோ.!

சிறந்த கேமரா வசதி, மெமரி வசதி போன்ற பல்வேறு அம்சங்களுடன் ஓப்போ எப்9 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.23,990-ஆக உள்ளது. மேலும் ஓப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனில் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் டெக்னாலஜி இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக முதல் வாட்டர் டிராப் டிஸ்பிளே என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கிறது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை மட்டுமே சற்று உயர்வாக இருக்கிறது என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தரமான டிஸ்பிளே:

தரமான டிஸ்பிளே:

ஒரு ஸ்மார்ட்போனில் முதலீடு செய்யும் போது பயனர்கள் சரிபார்த்து, மதிப்பீடு செய்வது,முதல் டிஸ்பிளே காட்சி ஒன்றாகும், அந்த வகையில் சிறந்த டிஸ்பிளே அம்சத்துடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. 4ஜி
இனடர்நெட் இணைப்பு வசதியைக் கொணடுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இக்கருவி 90.8 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வசதியைக் கொண்டுள்ளது, எனவே சிறந்த திரை அனுபவம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. ஐபோனுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தான்
கூறவேண்டும்.

நிறங்கள் மற்றும் வடிவமைப்பு

நிறங்கள் மற்றும் வடிவமைப்பு

ஊதா, சன்ரைஸ் ரெட், மற்றும் ட்விலைட் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த அட்டகாசமான ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நவீனதொழில்நுட்ப அம்சங்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட சற்று வித்தியசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல். ஒப்போ ஸ்மார்ட்போனுக்கு இருக்கும் அதே ஸ்டைலில் களமிறங்கியுள்ளது இந்த அட்டகாசமான எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஐபோனை விட சிறந்த வடிவமைப்புடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

 பேட்டரி ஆயுள்

பேட்டரி ஆயுள்

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் போனின் பேட்டரி ஆயுள் மிக முக்கியமானது என்று தான் கூறுவார்கள், அதற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது. மேலும் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் டெக்னாலஜி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை சுத்தமாக கிடையாது என்று தான் கூறவேண்டும், இது குறைந்த மின்னழுத்த-வேக சார்ஜிங் பொறிமுறையை பயன்படுத்துவதன் மூலம் உடனடி பேட்டரி சார்ஜ் சுழற்சிகளை உறுதிப்படுத்துகிறது. இந்த புரட்சிகர வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்துடன், வழக்கமான 5V / 1A சார்ஜிங் முறைகள் விட உங்கள் OPPO F9 Pro 4 முறை வேகமாக வசூலிக்க முடியும். அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் பயனர்கள் சந்திக்கும் பேட்டரி சிக்கல்களைத் தீர்க்கிறது ஒப்போ எப்9 ப்ரோ .

கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக 25எம்பி செல்பீ கேமரா மற்றும் f/2.0 யிநசவரசந போன்ற வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல்வேறு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். டிஸ்எல்ஆர் கேமராவை விட சிறந்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா. அதன்பின்பு 12எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். அதன்படி துல்லியமான புகைப்படங்களை எடுக்க இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மிகவும் உதவியாய் இருக்கும். பல்வேறு விருப்பங்களை கொண்டு எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் டூயல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

சேமிப்பு அம்சங்கள்

சேமிப்பு அம்சங்கள்

இரண்டு சிம் கார்டு மற்றும் ஒரு மெமரி கார்டு-க்கு தகுந்தபடி இவற்றுள் ஸ்லாட் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் போனின் நினைவகம் மட்டுமே மிக அதிகமாக இருக்கிறது. இருந்போதிலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன் மாடல். ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள் அனைத்தும் இவற்றுள் இருக்கிறது.
மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இணையம் மற்றும் வீடியோ கேம் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கலர் ஒஎஸ் 5.2 சார்ந்த ஆண்;ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, எனவே விற்பனையில் அதிக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறுது.

பயனர்களுக்கு தகுந்தபடி  வெளிவந்துள்ளது.

பயனர்களுக்கு தகுந்தபடி வெளிவந்துள்ளது.

ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனில் சிறந்த கேமரா அனுபவம், மேம்பட்ட வடிவமைப்பு, பின்பு மல்டிமீடியா நுகர்வு மற்றும் இசைவான மென்பொருள் அனுபவத்தை கொண்டுள்ளது. குறிப்பாக பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பயனர்களுக்கு தகுந்தபடி சிறந்த ஸ்மார்ட்போன் அம்சத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது. மேலும் ஒப்போ நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO F9 Pro Next gen technology features without compromising on basics: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X