ஒப்போ எப்9, எப்9 ப்ரோ மற்றும் ஏ83 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
ஒரு ஸ்மார்ட்போனில் முதலீடு செய்யும் போது பயனர்கள் சரிபார்த்து, மதிப்பீடு செய்வது,முதல் டிஸ்பிளே காட்சி ஒன்றாகும், அந்த வகையில் சிறந்த டிஸ்பிளே அம்சத்துடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்து
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அறிவிப்பை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் ஒப்போ எப்9, எப்9 ப்ரோ மற்றும் ஏ83 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகைகளை
பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் ஒப்போ எப்9, ஒப்போ எப்9 ப்ரோ மற்றும் ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.2000 வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் ரூ.1000 வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ எப்9 விபரக்குறிப்பு:
- 6.3 இன்ச் எச்டி பிளஸ் 1080x2280 பிக்சல் ரெசொலூஷன் உடன் கூடிய 19.5:9 விகித வாட்டர் ட்ரோப் நாட்ச் டிஸ்பிலே
தொடுதிரை
- ஆக்டா கோர் மீடியா டெக் ஹெலியோ பி60 சிப்செட்
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256ஜிபி விரிவாக்க சேமிப்பு
- 16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் செகண்டரி சென்சார் கொண்ட டூயல் கேமரா
- 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- விஓசிசி பாஸ்ட் சார்ஜிங்
- 3,500 எம்.ஏ.எச் பேட்டரி
- 4ஜி வோல்ட்
- வைப்பை 802.11
- ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- ஜிபிஎஸ்

ஒப்போ எப்9 ப்ரோ:
ஒரு ஸ்மார்ட்போனில் முதலீடு செய்யும் போது பயனர்கள் சரிபார்த்து, மதிப்பீடு செய்வது,முதல் டிஸ்பிளே காட்சி ஒன்றாகும், அந்த வகையில் சிறந்த டிஸ்பிளே அம்சத்துடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. 4ஜி இனடர்நெட் இணைப்பு வசதியைக் கொணடுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு
இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஒப்போ எப்9 ப்ரோ கேமரா:
செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக 25எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
மேலும் பல்வேறு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். டிஸ்எல்ஆர் கேமராவை விட சிறந்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா.
அதன்பின்பு 12எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். அதன்படி துல்லியமான புகைப்படங்களை எடுக்க இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மிகவும் உதவியாய் இருக்கும். பல்வேறு விருப்பங்களை கொண்டு எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் டூயல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

ஒப்போ எப்9 ப்ரோ இயங்குதளம் :
ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இணையம் மற்றும் வீடியோ கேம் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கலர் ஒஎஸ் 5.2 சார்ந்த ஆண்;ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications