Subscribe to Gizbot

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவின் அளவை சொன்னால் நம்புவீர்களா?

Written By:

ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்கொண்டுள்ள "செல்பீ மோகம்" பற்றிய அறிமுகமோ அல்லது விளக்கமோ துளிகூடத் தேவையில்லை. பேஸ்புக், இன்ஸ்டா, ஸ்நாப்சாட் அப்லோடிங் தொடங்கி காரண காரியமே இல்லாமல் அனுதினமும் எடுத்து தள்ளப்படும் செல்பீக்கள் இங்கு கோடி.!

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவின் அளவை சொன்னால் நம்புவீர்களா?

நேரங்காலம் மற்றுமின்றி வயது வரம்பும் பார்க்காத இந்த செல்பீ போக்கானது, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் புதிய உயரங்களை எட்டப்போகிறதென்பது உறுதி. அதையெல்லாம் மனதிற்கொண்டு தான் உருவாக்கம் பெற்றுவருகின்றன, செல்பீ கேமராவை மையமாக கொண்ட ஸ்மார்ட்போன்கள்.!

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவின் அளவை சொன்னால் நம்புவீர்களா?

அப்படியான செல்பீ ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியில் தனெக்கென ஒரு தனி வழித்தடத்தை அமைத்துக்கொண்ட நிறுவனங்களில் ஒன்றுதான் - ஒப்போ. புத்தம் புதிய கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து அதைவொரு பாணியாகவே மாற்றுயமைப்பதில் கில்லாடியான ஒப்போவின் படைப்புகள், மிகவும் தனித்துவமானவைகள் என்பதை மறைதிரையின்றியே பேசலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செல்பீயின் போக்கை மாற்றிய ஒப்போ எப்7.!

செல்பீயின் போக்கை மாற்றிய ஒப்போ எப்7.!

செல்பீ கைப்பற்றும் முறையையே ஒப்போ மாற்றியதென்றால் அது மிகையாகாது. அதிலும் எப்7, ஒரு புதிய அத்தியாயத்தையே எழுதியது. நம்பமுடியாத 25 எம்பி செல்பீ கேமரா கொண்டிருப்பதுடன், அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் ஒப்போ புகுத்தியுள்ளது.

செல்பீக்களுக்கான ஹை டைனமிக் ரேஞ்ச்.!

செல்பீக்களுக்கான ஹை டைனமிக் ரேஞ்ச்.!

ஒரு பெரிய ஸ்மார்ட்போனின் முதல் முறையாக செல்பீக்களுக்கான ஹை டைனமிக் ரேஞ்ச் (HDR) தொழில்நுட்பத்தை புகுத்தியதும் ஒப்போ தான். தவிர, இந்த ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட பியூடிப்பை, மற்றும் சில அற்புதமான கேமரா அம்சங்களும் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது எல்லாமே கேமரா அம்சங்கள் மட்டும் தானா.?

அப்போது எல்லாமே கேமரா அம்சங்கள் மட்டும் தானா.?

பல்லாண்டு கால கடின உழைப்பிற்கு பின்னர், ஒப்போ சில சிறப்பான செல்பீ-படத்தொகுப்புகளை வழங்கும் கேமரா சாதனங்களை உருவாக்க தொடங்கியது. நிறுவனத்தின் புதுமையான அம்சங்கள், சந்தையில் வேறு எந்த சாதனங்களாலும் ஒப்பிட முடியாத முடிவுகளை வழங்கத்தொடங்கின. மறுகையில் பயனர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தன. அப்போது எல்லாமே கேமரா அம்சங்கள் மட்டும் தானா.? என்று கேட்டால் - இல்லை, வன் மற்றும் மென்பொருள் அம்சங்களிலும் ஒப்போ எப்7 கலக்கும், பயப்பட வேண்டாம்.

உலகளாவிய மனித முகங்களின் டேட்டா பேஸ்.!

உலகளாவிய மனித முகங்களின் டேட்டா பேஸ்.!

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பொறுத்தமட்டில், இது ஏஐ சக்தியை இணைப்பதன் மூலம் பயனரின் சரியான செல்பீ சூத்திரத்தை உருவாக்குகிறது. அதாவது, உலகளாவிய மனித முகங்களின் டேட்டா பேஸ் மற்றும் ஆழமான கணினி கற்றல் வழியாக பல்வேறு நபர்களின் முகங்களில் இருந்து பெறப்பட்ட தனித்துவமான தகவலை சேகரித்து அதிலிருந்து கிடைக்கும் சிறப்பான விடயங்களை செல்பீக்களில் வெளிப்படுத்தும்.

சிக்கலான லைட்டிங் நிலைமைகள் மற்றும் சிக்கலான பின்னணி.!

சிக்கலான லைட்டிங் நிலைமைகள் மற்றும் சிக்கலான பின்னணி.!

ஒப்போ எப்7 மட்டுமன்றி ஒப்போவின் மிக சமீபத்திய கைபேசிகளான- எப்5 மற்றும் ஏ83 ஆகிய கருவியலிலும் செல்பீ மேம்பாட்டிற்கான இன் ஸ்மார்ட் ஏஐ பியூட்டி டெக்னாலஜி இடம்பெற்றுள்ளது. இது குறிப்பாக சிக்கலான லைட்டிங் நிலைமைகள் மற்றும் சிக்கலான பின்னணியில் அதிக கவனம் செலுத்துகிறது.

How to check PF Balance in online (TAMIL)
வேறென்ன எதிர்பார்க்கலாம்.?

வேறென்ன எதிர்பார்க்கலாம்.?

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில், மேம்பட்ட ஏஐ தொழில்நுட்பத்தை தவிர்த்து சில புதிய சுத்தமான தந்திரங்களையும் எதிர்பார்க்கலாம். இதன் 25எம்பி அளவிலான உயர் இறுதியில் கேமராவின் மேம்பட்ட ப்யூட்டி முறையானது ஒவ்வொரு சாத்தியமான வழியிலும், அதன் முன்னோடிளை காட்டிலும் சிறப்பான செல்பீக்களை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மிகவும் புதுமையான 'தனிப்பயனாக்கப்பட்ட அழகு விளைவுகள்' இருப்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம். அது ஆண் மற்றும் பெண்களுக்கு இடையிலயான வேறுபட்ட மேம்பாடுகள் நிகழ்த்தும். மொத்தத்தில் இந்த புதிய செல்பீ ஸ்மார்ட்போன் மீதும், அதன் எதிர்கால மேம்படுத்தல்கள் மீதும் ஒரு நெருக்கமான பார்வையை வைத்திருப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
OPPO F7 with the new AI powered camera will set new benchmarks in selfie segment. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot