25எம்பி செல்பீ கொண்ட ஒப்போ எப்7: இந்திய விலையை சொன்னால் நம்புவீர்களா?

இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் விவோ வி9, மோட்டோ எக்ஸ் 4, மற்றும் ஹானர் 8 ப்ரோ ஆகியவற்றிற்கு எதிராக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

|

இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகமானது. வெளியான புதிய ஒப்போ எப்7 ஆனது சந்தையில் நிலவும் சமீபத்திய ஸ்மார்ட்போன் போக்குகளை பின் தொடரும் வண்ணம் டிஸ்பிளேவில் பொதிக்கப்பட்ட ஒரு முன் பக்க -கேமரா, இயர்பீஸ், மற்றும் ஒரு பெஸல்லெஸ் வடிவமைப்பு ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களாக, அதன் 6.23 அங்குல முழு திரை 2.0 டிஸ்ப்ளே, புத்தம் புதிய 19: 9 என்கிற காட்சி விகிதம், 25-மெகாபிக்சல் முன்பக்க கேமரா, நிகழ்நேர எச்டிஆர், ஏஐ பியூட்டி 2.0 பயன்பாடு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஆப்-இன்-ஆப் மல்டி டாஸ்கிங் அம்சம் ஆகியவைகள் திகழ்கிறது.

வண்ண மாறுபாடுகள்.!

வண்ண மாறுபாடுகள்.!

இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் விவோ வி9, மோட்டோ எக்ஸ் 4, மற்றும் ஹானர் 8 ப்ரோ ஆகியவற்றிற்கு எதிராக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ஒப்போ எப்7 கருவியின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.21,990/-க்கு வாங்க கிடைக்கும். வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் - சோலார் ரெட் மற்றும் மூன்லைட் சில்வர் ஆகுல இரண்டு நிற வகைகளில் - ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் வாங்குவதற்கு கிடைக்கும்.

இந்திய விலை நிர்ணயம்.!

இந்திய விலை நிர்ணயம்.!

மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது, டயமண்ட் பிளாக் மற்றும் சன்ரைஸ் ரெட் ஆகிய வண்ண மாறுபாடுகளால் ரூ.26.990/-க்கு வாங்க கிடைக்கும். இந்த இரண்டு மாறுபாடுகளும் ஸ்பெஷல் எடிஷன்கள் என்பதும், இவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்போ கடைகளின் வழியாக மட்டுமே வாங்க கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

24 மணிநேர சிறப்பு ப்ளாஷ் விற்பனை.!

24 மணிநேர சிறப்பு ப்ளாஷ் விற்பனை.!

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதியன்று நிகழும் 24 மணிநேர சிறப்பு ப்ளாஷ் விற்பனையில் பங்கேற்கலாம். பிளிப்கார்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள 777 ஒப்போ கடைகளில் இந்த விற்பனை நிகழவுள்ளது.

அம்சங்களை பொறுத்தமட்டில்.!

அம்சங்களை பொறுத்தமட்டில்.!

இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்டுள்ள ஒப்போ எப்7 ஆனது கலர்ஸ்ஓஎஸ் 5.0 (ColorOS 5.0) கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலானது. இந்த ஸ்மார்ட்போன் 6.23 அங்குல முழு எச்டி + (1080x2280 பிக்சல்கள்) புல் வியூ 2.0 டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் திரை விகிதம் 19: 9 ஆகும். இது 64 பிட் மீடியா டெக் ஹெலியோ பி 60 ஆக்டா-கோர் எஸ்ஓசி உடனான 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுகிறது.

மேம்படுத்தபட்ட கேமரா.!

மேம்படுத்தபட்ட கேமரா.!

எப்/1.8 துளை உடனான ஒரு 16 எம்பி பின்பக்க கேமராவும், ஏஐ ஸீன் ரிககனைசேஷன் அம்சம் மற்றும் எப் / 2.0 துளை, சோனி ஐஎம்எக்ஸ் 576 சென்சார், நிகழ் நேர எச்டிஆர் விளைவுகள் ஆகியவைகளை கொண்ட ஒரு 25 மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் சுமார்வ் 296 முக அடையாள புள்ளிகளை கண்டறியும் (முதல் தலைமுறை தொழில்நுட்பத்தை விட 20 சதவிகிதம் கூடுதல் மேம்படுத்தல்) ஏஐ பியூட்டி 2.0 பயன்பாட்டையும் கொண்டுள்ளது.

ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி செல்பீ.!

ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி செல்பீ.!

இது இன்னும் துல்லியமான முக அங்கீகார திறன்களை அனுமதிக்கிறது. மேலும் இந்த பயன்பாடானது ஒரு நபரின் வயது, பாலினம், தோல் நிறம் மற்றும் தோல் வகை ஆகியவற்றை தனித்தனி கண்டறிந்து செயல்படும் திறனும் கொண்டுள்ளது. சுருக்கமாக ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி செல்பீக்களை கைப்பற்ற உதவும்.

64ஜிபி அல்லது 128ஜிபி.!

64ஜிபி அல்லது 128ஜிபி.!

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரேம் மாறுபாட்டை பொறுத்து 64ஜிபி அல்லது 128ஜிபி என்க்ரியா உள்ளடக்க சேமிப்புத்திறன்களை கொண்டுள்ளது. ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி ஓடிஜி மற்றும் ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. சென்சார்களை பொறுத்தமட்டில், அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் மற்றும் ப்ராக்ஸிமிட்டி ஆகியவைகளை கொண்டுள்ளது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
பேஸ் அன்லாக்.!

பேஸ் அன்லாக்.!

பின்புற பலகத்தில் கைரேகை சென்சார் ஒன்றை கொண்டுள்ள இக்கருவி முன்பக்கத்தின் வழியாக, 'பேஸ் அன்லாக்' அம்சத்தையும் ஆதரிக்கிறது. ஒரு 3400எம்ஏஎச்பேட்டரி மூலம் இயக்கப்படும் ஒப்போ எப்7 ஆனது, 33.5 மணி நேர இசை பின்னணி வரை வழங்குமென்று நிறுவனம் கூறுகிறது. அளவீட்டில் 156x75.3x7.8 மிமீ மற்றும் 158 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F7 With 25-Megapixel Front Camera, Bezel-Less Display Launched in India: Price, Specifications. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X