கற்பனைக்கு எட்டாத 19:9 விகிதம்; 6.2 இன்ச் முழு எச்டி+ டிஸ்பிளே; வேறென்ன வேண்டும்?

நன்கு அறியப்பட்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ, மிக விரைவில் அதன் அடுத்தகட்ட செல்பீ எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போனை றிமுகப்படுத்தவுள்ளது. அது ஒரு முற்றிலும் புதிய 19: 9 என்கிற திரை விகிதத்தை கொண்டுள்ளது.

|

இந்த 2017- ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் டிஜிட்டல் உள்ளடக்கங்களில் ஏற்பட்ட மாற்றம் மிக பெரியதாகும். குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் வழக்கமான 16: 9 என்கிற திரை விகிதமானது, 18: 9 என்கிற தரநிலையை எட்டியது. இந்த அளவிலான டிஸ்பிளே அதிக அளவிலான அதிவேக மல்டிமீடியா பார்க்கும் அனுபவத்தை நமக்கு வழங்குகிறது.

ஆனால் நமக்குத் தெரியும், தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி ஒருபோதும் நின்று போவதில்லை. ஆம் ஒப்போ நிறுவனம், அதன் அடுத்த தலைமை சாதனமான ஒப்போ எப்7 ஸ்மார்ட்பபோனில் ஒரு நம்பமுடியாத 19: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தை புகுத்தியுள்ளது.

வேற லெவல் மல்டிமீடியா அனுபவம்.!

வேற லெவல் மல்டிமீடியா அனுபவம்.!

நன்கு அறியப்பட்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ, மிக விரைவில் அதன் அடுத்தகட்ட செல்பீ எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போனை றிமுகப்படுத்தவுள்ளது. அது ஒரு முற்றிலும் புதிய 19: 9 என்கிற திரை விகிதத்தை கொண்டுள்ளது. அதாவது ஒரு 2280 x 1080 பிக்சல்கள் அளவிலான தீர்மானம் கொண்ட ஒரு 6.2 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது வழக்கமான டிஸ்பிளே வடிவமைப்பை உடைபத்தோடு சேர்த்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான புதியதொரு பாணியையும் உருவாக்கி விட்டுள்ளது.

அதிவேக வீடியோ பின்னணி மற்றும் கேமிங்.!

அதிவேக வீடியோ பின்னணி மற்றும் கேமிங்.!

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் 19: 9 என்கிற திரை விகித அளவானது, கற்பனைக்கு எட்டாத 89.09 சதவிகிதம் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை கொண்டுள்ளது. இதன் காரணமாக, இடைப்பட்ட விலை பிரிவில் வேறு எந்த ஸ்மார்ட்போனும் வழங்க முடியாத சிறந்த வீடியோ பின்னணி மற்றும் கேமிங் அனுபவத்தை இக்கருவி உறுதி செய்யும். நோட்ச்-வடிவ முழுத்திரை வடிவமைப்புக்கான காப்புரிமை பெற்ற முதல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒப்போ எப்7-ல் சைகைகள் வழியாக பயன்பாடுகளை நேவிகேட் செய்யும் திறனும் இடம்பெற்றுள்ளது.

அற்புதமான வடிவமைப்பு.!

அற்புதமான வடிவமைப்பு.!

ஒரு ஸ்மார்ட்போனில் உயர்ந்த ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை அடைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதை அடைந்ததோடு சேர்த்து எந்த விதமான அழகியல் தடையும் இல்லாமல் ஒப்போ எப்7 உருவாக்கம் பெற்றுள்ளது. அதாவது ஒரு துடிப்பான முழு எச்டி + டிஸ்பிளே, 19: 9 என்கிற திரை விகிதம் மற்றும் பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்டிருந்தாலும் கூட கைகளுக்குள் அடங்கும் ஒரு வசதியான வடிவமைப்பு பெற்றுள்ளது. அது திரைப்படங்கள், கேம்ஸ் மற்றும் பிற டிஜிட்டல் உள்ளடக்கங்களை சிரமம் இல்லாமல் அணுக அனுமதிக்கிறது. சுருக்கமாக இதன் 6.2 இன்ச் டிஸ்பிளே உங்களின் கைகளுக்கும் அடங்குமொரு வடிவமைப்பை கொண்டுள்ளது.

புத்திசாலித்தனமான ஏஐ செல்பீ கேமரா.!

புத்திசாலித்தனமான ஏஐ செல்பீ கேமரா.!

ஒப்போ எப்7 ஒரு சிறந்த முன்பக்க எதிர்கொள்ளும் கேமராவை கொண்டுள்ளது, அதாவது 25எம்பி அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை பயன்படுத்துகிறது. இதன் சிறந்த சென்சார் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏஐ தொழில்நுட்பமானது பிரகாசமான, தெளிவான மற்றும் நிஜ வாழ்க்கை புகைப்படங்களை கைப்பற்ற உதவுகிறது. மேலும் இந்த செல்பீ கேமராவானது, கிடைக்கக்கூடிய ஒளியைப் புரிந்துகொள்ளும் திறனை கொண்டுள்ளதால், மோசமான ஒளிநிலைகள் பற்றிய கவலையே உங்களுக்கு தேவையில்லை.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
சவாலான ஒளி நிலைகளை எளிதாக சமாளிக்கும்.!

சவாலான ஒளி நிலைகளை எளிதாக சமாளிக்கும்.!

ஒப்போ எப்7 கேமராவானது மேம்படுத்தப்பட்ட எச்டிஆர் பயன்முறைக்கு துணைபுரிகிறது, இது சவாலான ஒளி நிலைகளை எளிதாக சமாளிப்பதோடு, மற்ற செல்பீ அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை போலல்லாமல், தெளிவற்ற ஒளி சூழ்நிலைகளில் கூட சிறந்த புகைப்படங்களை பதிவாவதை உறுதி செய்கிறது. அதாவது கூறப்படும் ஹை டைனமிக் ரேன்ஜ் (HDR) தொழில்நுட்பத்துடன் கூடிய 25எம்பி ஏஐ கேமராவானது மிருதுவான படத்தொகுப்புகளை அசல் வண்ணங்களில் கைப்பற்றும். உடன் இதன் மேம்பட்ட ஏஐ பியூட்டி 2.0 பயன்முறையானது, தோல் மற்றும் வண்ணம், வயது ஆகியவைகளை கண்டறிந்து ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான செல்பீக்களை கைப்பற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் 26, 2018 அன்று இந்திய சந்தையில் களமிரனாகும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது சந்தையில் ஒரு புதிய பாணியை தொடங்கி வைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நேர்த்தியான செல்பீ, மிகச்சிறந்த ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம், மற்றும் அறிவார்ந்த ஏஐ கேமரா என இந்திய சந்தையியை சுவை பார்க்கும் அத்துணை அம்சங்களையும் ஒப்போ எப்7 கொண்டுள்ளது. நாளை வெளியாகும் இக்கருவி பற்றிய கூடுதல் தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
OPPO F7 will sport a 6.2-inch Full HD+ screen with a stunning edge-to-edge design. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X